சிறு வயதிலேயே சூப்பர் ஸ்டாருடன் நடித்துள்ள இந்த நடிகர் யார் தெரியுமா? இன்னிக்கி இவர் லெவெலே வேற

0
747
- Advertisement -

ரஜினியுடன் படத்தில் சிறுவனாக நடித்த பிரபலம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே பிரபல நடிகர்களின் குழந்தை வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக பல முன்னணி நடிகர்களுடன் அந்த பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து பல பிரபலங்கள் சிறுவயதில் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த நிலையில் தற்போது ஒரு பிரபலத்தின் சிறு வயது புகைப்படம் தான் வெளியாகி இருக்கிறது. இவர் வேற யாரும் இல்லைங்க ரித்திக் ரோஷன் தான். 1986 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் பகவான் தாதா. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரித்திக் ரோஷன் நடித்திருந்தார். இந்த படத்தை ரித்திக் ரோஷன் தந்தை ராகேஷ் ரோஷன் தான் தயாரித்திருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி இருவருமே நடித்திருந்தார்கள்.

- Advertisement -

ரித்திக் ரோஷன் குறித்த தகவல்:

உலக அளவில் உள்ள ரசிகர்களை அழகால் தன் பக்கம் இழுத்தவர் நடிகர் ரித்திக் ரோஷன். அதுமட்டும் இல்லாமல் இவரை ஆணழகன் என்று தான் கூறுவார்கள். இவருக்கு இளைஞர்கள் பட்டாளத்தை விட பெண்களின் கூட்டம் தான் இவருக்கு அதிகம். அந்த அளவிற்கு தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்து உள்ளார். மேலும், இந்திய சினிமாவை உலக அளவிற்கு எடுத்து சென்ற ஹீரோக்களில் நடிகர் ரித்திக் ரோஷனும் ஒருவர்.

ரித்திக் ரோஷன் திரைப்பயணம்:

இவர் 1980 களில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானாலும் தற்போது வரை சினிமா உலகில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பிற்கு மட்டும் இல்லாமல் இவருடைய அழகுக்கும், உடல் கட்டுக்கோப்புக்கும் என ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. வயதானாலும் இவர் தன்னுடைய உடல் கட்டுக்கோப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, இவருடைய ‘கிரிஸ்’ படம் ஹிந்தி ரசிகர்களை மட்டும் கவரவில்லை.

-விளம்பரம்-

வார் படம்:

இந்த படம் பல மொழிகளில் வெளிவந்தது. அதுமட்டும் இல்லாமல் ஆல் டைம் பேவரைட் படமாக இது மாறியது. 90 கால கட்டங்களில் இருந்து இப்படி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ரித்திக் ரோஷனுக்கு சமீப காலமாக இவருடைய படங்கள் எல்லாம் தோல்வியில் முடிவடைந்து இருக்கிறது. இதனால் ரசிகர்கள் எல்லாம் மிகவும் கவலையில் இருந்தார்கள் என்று தெரிய வந்தது. மேலும், ரித்திக் ரோஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான “வார்” திரைப் படம் மூலம் மீண்டும் சினிமாவில் தன் இடத்தை பிடித்து விட்டார் ரித்திக் ரோஷன்.

ரித்திக் ரோஷன் படங்கள்:

இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு இந்த படம் 400 கோடிக்கு ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் நடிகர் ரித்திக் ரோஷன் அவர்கள் சினிமாத் திரையில் தன்னுடைய வெற்றி படங்களை கொடுக்க ஆரம்பித்து விட்டார். தற்போது இவர் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Advertisement