விவசாயிகளுக்காக தனது விலை உயர்ந்த சொகுசு காரை விற்ற பிரபல நடிகர் ?

0
2422
sudeep

கன்னட நடிகர் சுதீப் நான் ஈ படத்தில் வில்லனாக நடித்ததில் சற்று தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனவர். We Respect Former அறக்கட்டளை சார்பில் விவசாயிகள் நலனுக்காக பெங்களூரில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சுதீப்,விவசாயிகள் படும் கஷ்டங்களை நாம் அனைவரும் அறிவோம். இடைத்தரகர்களால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தான் நமக்கு சோறு போடுபவர்கள். பணக்காரர்களுக்கு மட்டுமே மதிப்பு இருக்கும் இந்த சமுதாயத்தில் விவசாயிகளுக்கும் அவர்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும்.

விவசாயிகள் காக்கப்பட அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளேன். விவசாயிகள் படும் கஷ்டங்களை நாம் கண்கூட பார்க்கிறோம். ஆனால், அவை நுட்பமாக நமக்கு தெரியாது. இந்த அறக்கட்டளையில் விவசாயிகளின் நலனுக்காக என்னிடம் உள்ள ஒரு விலை உயர்ந்த ஆடம்பர காரை விற்கிறேன். எனக் கூறினார் சுதீப்.