வள்ளி சீரியல் நடிகர் ராஜ்குமாரின் மனைவி மற்றும் மகள். குயூட் குடும்ப புகைப்படம்.

0
21007
rajkumar
- Advertisement -

சின்னத்திரை சீரியல் நடிகர்களில் மிகப் பிரபலமானவர் நடிகர் ராஜ்குமார். இவர் பாரதி கண்ணம்மா, அக்னி நட்சத்திரம் என சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்ற புதிய சீரியலில் இவர் கமிட் ஆகி இருக்கிறார். இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரம் குறித்து கேட்டபோது அவர் கூறியது, சன் டிவியில் ஒளிபரப்பான வள்ளி சீரியல் மூலம் நான் மக்கள் மத்தியில் பிரபலமேன். அந்த சீரியல் முடிந்த உடனே எனக்கு இடைவெளியில்லாமல் அடுத்தடுத்து சீரியல் கமிட்டாகி வருகிறேன்.

-விளம்பரம்-
பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியல்..

நான் ஏற்கனவே விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, பாரதி கண்ணம்மா என்ற சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருக்கிறேன். தற்போது நான் பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியலில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த சீரியலில் 3 குழந்தைகளை தான் லீட் ரோலில் நடிக்கிறார்கள். அவர்களை சுற்றி தான் கதையே நகர்கிறது. அந்த குழந்தைகளில் 3 அண்ணன், தம்பி. அந்த குழந்தைகளில் இருந்து ஒரு குழந்தை தொலைந்து போய்விடும். இது தான் கதையின் கரு. அந்த மூன்று அண்ணன் தம்பியில் நானும் ஒருத்தன்.

- Advertisement -

இந்த கதை முழுக்க முழுக்க குடும்ப உறவுகளையும், அவர்களுக்குள் இருக்கும் பாசப் பிணைப்பையும் பிரதிபலிக்கும் சீரியல் ஆகும். பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியலில் நடிப்பதற்கு ஒவ்வொரு குழந்தையையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து இருக்கிறார்கள். இந்த குழந்தைகளும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த சீரியல் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. பொம்மு கதாபாத்திரத்தில் ரித்வா நடிக்குறாங்க. அத்விக், சந்தோஷ், சஞ்சய் ஆகியோரும் லீட் ரோல்ல நடிக்கிறார்கள். என் மனைவியும் மகளும் ஊரில் இருக்கார்கள். நான் வாரத்துக்கு ஒரு முறை தான் போய் பார்ப்பேன். அவர்களை பார்க்காமல் ஒரு வாரம் ரொம்ப கஷ்டமா இருக்கும். அவர்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். அவர்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்.

மனைவி மற்றும் மகளுடன் ராஜ்குமார்

சில சமயம் சீரியலில் நடிக்கும் ரித்வா, அத்விக் ஆகியோரை பார்க்கும் போது என் மகள் ஞாபகம் வந்துடும். அந்தச் சமயத்தில் அவர்களை என் பக்கத்தில் கூப்பிட்டுப் பேசிட்டு இருப்பேன். மனசு லேசாகிடும், ஆறுதலா இருக்கும். சமீபத்தில் என் பிறந்தநாளுக்கு என் மனைவி மறக்க முடியாத பரிசு கொடுத்தார்கள். என் மகள், நான், என் மனைவி என்று மூன்று பேரும் ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டு இருந்தோம். அந்த ட்ரெஸ் என் மனைவி ஏற்பாடு செய்து இருந்தார். அந்த நாள் என்னால் இன்று வரை மறக்க முடியாது என்று புன்னகையுடன் கூறினார்.

-விளம்பரம்-
Advertisement