படத்துக்காக என்னால அப்படி எல்லாம் பண்ண முடியாது ! அதிரடி காட்டிய கீர்த்தி சுரேஷ் !

0
4276
Keerthi suresh Actress
- Advertisement -

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மகாநதி என்ற தலைப்பில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சாவித்திரி கதாபத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், அவருடன் துல்கர் சல்மான், சமந்தா உள்ளிட்டவர்களும் பல்வேறு கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை நாக்.அஸ்வின் இயக்கி வருகிறார்.
keerthy sureshபடத்தின் ஒரு செட்யூல் முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது. மேலும் இந்த பாகத்தில் நடிகை சாவித்திரி சற்று உடல் பருமனாக உள்ள கதை தயாராகவுள்ளது. இதற்காக கீர்த்தி சுரேஸிடம் இன்னும் குண்டாகுமாறு கூறியுள்ளார் இயக்குனர்.

-விளம்பரம்-

ஆனால், கீர்த்தி சுரேஷ் அதற்கு மறுத்துள்ளார். முன்னதாக, இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அனுஸ்கா குண்டு பெண்ணாக நடிக்க உடம்பினை ஏற்றினார். ஆனால், அதன் பின்னர் அவரது அந்த குண்டு உடம்பினை குறைக்கவே முடியவில்லை. இதன் காரணமாக ஏற்ப்பட்ட பயத்தினால் தற்போது கீர்த்தி சுரேஷ் தன் உடம்பினை குண்டாக மாற்ற முடியாது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதனால், பாகுபலி படத்தில் அனுஸ்காவிற்கு கிராபிக்ஸ் மூலம் உடம்பினை குறைத்து காட்டியது போல், மகாநதி படத்தில் கீர்த்திக்கு உடம்பினை குண்டாக காட்ட முடிவெடுத்துள்ளார் இயக்குனர் நாக்.அஸ்வின். இந்த படம் 2018 மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.

Advertisement