நீங்கள் என்னை கொன்றாலும் நான் கொண்டாடுவேன் ! சர்ச்சை ட்விட் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன் !

0
1311
lakshmi-ramakrishnana

கடந்த வாரம் அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் வெளிவந்த படம் அருவி. இந்த படத்தின் சமூக அக்கறை கொண்ட கதைக்கரு டீவி நிகழ்ச்சி ஒன்றையும் நன்றாக வருத்தெடுத்து இருந்தது. இதற்காக மக்களிடையே நல்ல வரவேற்பபை பெற்றது இந்த படம்.
Aruviநடிகை மற்றும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கடந்த பல வருடங்களாக கிட்டத்தட்ட 1500 எபிஸோடுகளாக ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் சாராம்சமே அடித்தட்டு மக்களின் பிரச்சனைக்குள் மூக்கை நுழைத்து அதை வைத்து டீவி ஷோ வியாபாரம் செய்வது தான் என்பது போல் அருவி படத்தில் காட்டப்பட்டிருந்தது.

இதனைக் கண்ட லட்சுமி ராமகிருஷ்ணன், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஏதோ பிரச்சனைகளை இதற்குள் இழுத்து போட்டு ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதாவது மீடியாவில் ஓப்பனாக பேசும் ஒரு பெண், அதிலும் பாலக்காட்டு ஐயர் சாதியை சேர்ந்த என்னைப் போன்றவர்களின் வாழக்கை, ‘இங்கு’ எயிட்ஸ் நோயை விடக் கொடுமையானது என்பது போல் ட்வீட் போட்டிருந்தார்.
aruvi-movieஇதனால் கடுப்பான நெட்டின்சன்கள், இந்த பிரச்சனைக்குள் உங்கள் சாதியை எதற்கு இழுத்துப்போடுகிறீர்கள்,? உங்களுக்கு அங்கீகாரம் கொடுத்து, வசதி கொடுத்து, வாழ வைத்த தமிழகம் உங்களை எய்ட்ஸ் நோயாளியைப் போல நடத்துகிறதா? எனக் கடுமையாக சாடினர்.

இதனைக் கண்டு மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார் பாலக்காட்டு ஐயர் லட்சுமி.

தனது பக்கத்தில் போட்ட அந்த பதிவில், நெற்றியில் காசுடன், பிணத்தைப் போல வேடம் அணிந்து மாலை போட்டு கொண்டு இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் இருக்கிறார். மேலும், ‘நீங்கள் என்னைக் கொன்றாலும் நான் கொண்டாடுவேன்’ எனவும் பதிவிட்டுள்ளார். இதனையும் வலைத்தளவாசிகள் வருத்தெடுத்து வருகின்றனர்.