தோனி ரசிகர்களை தொடர்ந்து அவீஸ் கானை ஆபாசமாக திட்டி தீர்க்கும் கோலி ரசிகர்கள். (இதெல்லாம் ரொம்ப தப்புங்க)

0
1125
- Advertisement -

விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய அவீஸ் கானை கோலி ரசிகர்கள் பலரும் அவதூறாக திட்டி தீர்த்து வருகின்றனர். ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டி நேற்று (ஏப்ரல் 27) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி டிவில்லியர்ஸ்ஸின் பிரமாண்டமான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது.

-விளம்பரம்-

இதைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி இந்த சவாலான இலக்கை நோக்கி சற்று நிதானமாகவே ஆட்டத்தை துவங்கியது.இந்த போட்டியில் துவக்க வீரர் ஷிகர் தவான் 6 ரன்களிலும், பிரித்வி ஷா 21 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் சிராஜின் சிறப்பான பந்து வீச்சினால் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு மர்கஸ் ஸ்டாய்னிஸ் 22 ரன்கள் ஆட்டமிழந்து வெளியேற ரிஷப் பண்ட் மற்றும் ஹெட்மையர் ஆகியோர் சற்று அதிரடியாக விளையாடினர்.

இதையும் பாருங்க : கொரோனா காலத்தில் விஜய் மக்கள் இயக்கம் செய்த மகத்தான உதவி. வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

இறுதியில் கடைசி ஓவரின் போது 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரிஷப் பண்ட்டால் 12 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் காரணமாக கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி பிரமாதமான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, 11 பந்துகளில் 12 ரன்கள் அடித்த நிலையில் நான்காவது ஓவரில் அவீஸ் கான் வீசிய பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.

r/ipl - Not even Dhoni will be happy to see people abusing Avesh Khan . I know how some fans get over-toxic sometimes but this is way too much.

கோலியின் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார் அவீஸ் கான். இப்படி ஒரு நிலையில் கோலியின் ரசிகர்கள் பலரும் அவீஸ் கானை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர். அவீஸ் கான் ஏற்கனவே சென்னைக்கு எதிரான போட்டியில் தோனியின் விக்கெட்டை கைபற்றிய பின்னர் தோனியின் ரசிகர்கள் பலரும் அவீஸ் கானை திட்டி தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement