இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது கனவு தகர்த்தபட்டது. தோல்வியை தழுவினர் இளம் வீரர் பிரக்ஞானந்தா.

0
1081
- Advertisement -

இந்தியாவின் இரண்டாவது கணவனாக FIDE உலக சதுரங்க போட்டியில் பிரக்ஞானந்தா உலகின் சிறந்த வீரரான கார்ல்சன்னிடம் தோல்வியை தழுவியுள்ளார். தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வந்த  FIDE உலக சதுரங்க போட்டியானது உலக செஸ் போட்டிகளில் அனைவரது கண்களையும் தமிழ் நாட்டின் பக்கம் திருப்ப வைத்தவர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. அஜர்பைஜானில் தற்போது நடைபெற்று வந்த உலக செஸ் தொடரில் இறுதிப்போட்டியில் கிரான்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.

-விளம்பரம்-

அவர் இதற்க்கு முன்னதாக உலக தரவரிசை பட்டியலில் 3ஆம் இடத்தில் இருந்த அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருவானா-வை அரையிறுதியில் வீழ்த்தி நேற்று மாலை 4 மணிக்கு மேக்னஸ் கார்ல்சனை இறுதிச் சுற்றில் மோதினர் அந்த சுற்று ட்ராவில் முடிந்தது. இறுதிபோட்டியின் முதல் சுற்று நேற்று முன் தினம் மாலை 4.30 மணிக்கு தொடங்கிய நிலையில் அப்போட்டியனது மாலை 7 மணிக்கு 35 நகர்வுக்கு பின் இருவரும் ஒப்புக்கொண்டு சமன் செய்தார்.

- Advertisement -

முதல் சுற்று சமனில் முடிந்ததால் நேற்று நடைபெற்ற 2 ஆம் சுற்றும் டிராவில் முடிந்ததால் இன்று டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது.பிரக்னந்தா வெற்றி பெற வேண்டும் இந்திய முழுவதும் ஆவலுடன் இருந்து வருகின்றனர். 2022 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இணையதளப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். இதன் மூலம் கார்ல்சனை வீழ்த்திய 3-வது இந்திய வீரராக மாறினார் பிரக்ஞானந்தா.

நேற்றைய முன் தினம் போட்டியில் போட்டியில் வெள்ளை நிற காய்களை கொண்டு களமிறங்கிய பிரக்ஞானந்தா, நேற்றைய முன் தினம் போட்டியில் சற்று முன்னிலையில் இருந்து வந்தார். 35 வது நகர்வுக்கு பின் போட்டி கடினமாக்க விரும்பாத இருவரும் ஒப்புக்கொண்டு சமன் செய்தனர். அதன் படி இன்று நடைபெற்ற டைபிரேக்கர் போட்டியானது இரண்டு சுற்றுகளாக நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா கார்ல்சன் தோல்வியை தழுவினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா கால்சென்னுக்கு சவால் கொடுத்தார்.

-விளம்பரம்-

இருந்தும் போராடிய அவரால் முதல் சுற்றில் வெற்றி பெற முடியவில்லை. 2-வது சுற்றிலும் கார்ல்சன் வெற்றி பெற, உலகக் கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இந்தத் தொடரில் ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா 2-ம் இடம் பிடித்தார். 3-வது இடத்தை ஃபேபியானோ கருனா பிடித்தார்.

சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சன்க்கு  $ 1,10,000 அமெரிக்கா டாலர்கள், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 91 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் பிரக்ஞானந்தாவிற்கு $ 80,000 அமெரிக்கா டாலர்கள், இந்திய மதிப்பில் 66 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். பிரக்ஞானந்தா இப்போட்டியில் வெற்றி பெற விட்டாலும் இந்திய மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Advertisement