இளையராஜாவின் ஆர்மோனியப் பெட்டியின் விலை எவ்வளவு தெரியுமா..!கேட்டால் ஷாக் ஆவிங்க..!

0
1708
- Advertisement -

இசைஞானி இளையராஜாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் ‘இசைஞானியுடன் ஒருநாள்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்லூரி மாணவர்களோடு கலந்துரையாடிய இளையராஜா தன் மெட்டுக்களால் மாணவர்களைக் கட்டிப்போட்டார்.

-விளம்பரம்-

ilayaraja

- Advertisement -

முதலில் கேக் வெட்டி 75-வது பிறந்த நாள் மகிழ்வை மாணவ, மாணவிகளோடு பகிர்ந்துகொண்டார். அடுத்ததாக கல்லூரி மாணவ, மாணவிகள் இளையராஜாவின் பாடல்களைப் பாடி அசத்த, அதை அகம் மகிழ்ந்து ரசித்தார் இளையராஜா.இந்த விழாவின் போது பேசிய அவர், நான் எத்தனையோ கல்லூரிக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், இந்தக் கல்லூரியில் என் எதிரே உள்ள மேஜையில் ஆர்மோனியப் பெட்டியைக் கொண்டு வந்துள்ளேன்.

என்னுடன் நண்பர்களாக பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் இல்லை. இவன் ஒருவன்தான் என்னுடைய நண்பன். கோவை உக்கடத்தில் எம்.என்.பொன்னையா ஆசாரியார் என்பவரிடமிருந்து இதை என் அண்ணா வாங்கி வந்தார். விலை 60 ரூபாய். உலகிலேயே விலை மதிப்பற்ற பொருள் எதுவென என்னைக் கேட்டால் நான் இந்த ஆர்மோனியத்தைதான் சொல்வேன்.

-விளம்பரம்-

ilaiyaraja

சிறு வயதில் நான் அதைத் தொட்டால் அண்ணா பிரம்பால் அடிப்பார். அவர் இருக்கும் நேரத்தில் எடுக்கவே மாட்டேன். அவர் இல்லாதபோது எடுத்து வாசித்துப் பழகினேன். தப்பும் தவறுமாக வாசித்துதான் கற்றுக்கொண்டேன். தவறுகள் போல நமக்கு குரு வேறு யாரும் கிடையாது என்று பேசி இருந்தார்.கலை உலகத்தில் இத்தனை ஆண்டுகள் இசை ஜாம்பவானாக இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் அவர் வைத்திருந்த ஆர்மோனியப் பெட்டியைக் கண்டதும் அங்கு இருந்தவர்கள் அனைவரும் மிகவும் நெகிழ்ந்து போயினர்.

Advertisement