Breaking News : இளையராஜாவின் மகள், பாடகி பவதாரணி இலங்கையில் மரணம். அதிர்ச்சியில் திரையுலகம்.

0
517
- Advertisement -

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பாவதரணி காலமாகி இருக்கும் சம்பவம் தமிழ் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இளையராஜாவின் உண்மையான இயற்பெயர் ராசய்யா. இவர் 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப் படத்தில் இசை அமைத்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இவர் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் இசையமைத்து உள்ளார். இவருடைய இசை திறமைக்கு பல விருதுகளை வாங்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இளையராஜா அவர்கள் நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றும், முறையாக பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமா உலகில் இசையமைப்பாளர், கவிஞர், பாடகர் என பல முகங்களைக் கொண்டவர்.

- Advertisement -

பின் இளையராஜா அவர்கள் ஜீவா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். இவர்கள் மூவருமே தன் தந்தையைப் போல இசையில் புலமை பெற்று வருகிறார்கள். இளையராஜாவின் குடும்பமே இசை குடும்பம் தான். இளையராஜாவிற்கு பிறகு சினிமா உலகில் இசையில் நிலையான இடத்தைப் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா.

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா அவர்கள் தன்னுடைய அப்பாவிடமே இசை பணியை தொடர்ந்து செய்து வருகிறார். மகள் பவதாரணி அவர்கள் மைடியர் குட்டி சாத்தான் என்ற படத்தின் மூலம் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவதாரணி. இவர் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமாக இருக்கும் சம்பவம் வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது பவதாரணிக்கு புற்றுநோய் இருந்திருக்கிறது இதற்காக அவர் சமீப காலமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். கிட்டத்தட்ட கடந்த ஐந்து மாதங்களாக அவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 5 மணி அளவில் அவர் காலமாகி இருக்கிறார் அவருக்கு வயது 47.

பவதாரணி தமிழில் எண்ணற்ற பாடல்களை பாடியிருந்தாலும் அவர் குறிப்பாக தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர் படங்களில் தான் அதிகம் பாடியிருக்கிறார். அதிலும் குறிப்பாக இளையராஜா இசையில் ‘பாரதி’ என்ற படத்தில் இவர் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலுக்கு இவருக்கு சிறந்த பெண்மணி பாடகிக்கான தேசிய விருது கிடைக்கப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement