அம்பேத்காருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய இளையராஜாவிற்கு பா ஜ கவில் கிடைத்த மிகப்பெரிய பதவி – ட்விட்டரில் அறிவித்த மோடி.

0
667
Ilayaraja
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மூடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசி இருந்தது பெரும் பேசு பொருளான நிலையில் தற்போது இளையராஜாவிற்கு பா ஜ க மிகப்பெரிய பதவியை கொடுத்து இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார். அதில் மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்.

-விளம்பரம்-

நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளை பாதுகாப்போம் – பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம், முத்தலாக் சட்டம் மூலம் பெண்களை முன்னேற்றி இருக்கிறார் மோடி.பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவின் மூலம் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று இருக்கிறார் மோடி, என்று இளையராஜா தனது முன்னுரையில் குறிப்பிட்டு இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : அஜித் மச்சினிச்சிய தெரியும் விஜய் மச்சினிச்சிய பார்த்துள்ளீர்களா ? என்னங்க அச்சு அசலா சங்கீதா மாதிரியே இருக்காங்க.

மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட இளையராஜா :

இளையரஜாவின் இந்த கருத்திற்கு பல விமர்சனங்கள் எழுந்தது. மோடியை இளையராஜா எப்படி அம்பேத்கருடன் ஒப்பிடலாம் என்று பல்வேறு கட்சியினர் கண்டனமும் தெரிவித்தனர். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர்ட் டி புலனாய்வு துறையில் ஒரு சம்மன் அனுப்பப்பட்டதாகவும் ஆனால், இளையராஜா அதற்கு ஆஜராகவில்லை என்றும் அதில் இருந்து தப்பிக்கத்தான் இளையராஜா தற்போது மோடி புகழ் பாடி வருவதாக கூட விமர்சனங்கள் எழுந்தது.

-விளம்பரம்-

எழுந்த விமர்சனங்கள் :

மேலும், வருங்காலத்தில் இளையராஜாவிற்கு பா ஜ கவில் இருந்து நிச்சயம் ஒரு பதவி வழங்கப்படும் என்றும் பலரும் கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா நியமிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்..இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சாதாரண பின்னணியில் இருந்து வந்த இளையராஜா மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார்.

எம் பி ஆனார் இளையராஜா :

மனித உணர்வுகளை இசையின் வாயிலாக அழகுற பிரதிபலித்தவர் இளையராஜா, அவரை நாடாளுமன்ற எம்.பி.யாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் மொத்தம் 12 பேர் நியமன எம்.பி.க்கள். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ராஜ்யசபா நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் தற்போது இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.

இளையராஜாவுடன் நியமிக்கப்பட்ட மற்ற நபர்கள் :

மேலும் வீரேந்திர ஹெக்டே, விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் ராஜ்யசபா நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தமிழ் சினிமாவில் குஷ்பூ, எஸ் வி சேகர், நமிதா, கெளதமி, காயத்ரி ரகுராம், கலா மாஸ்டர், ராதாரவி, செந்தில் என்று பல நட்சத்திர பிரபலங்கள் உறுப்பினர்களாக திகழ்ந்து வரும் நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான இளையராஜாவும் பா ஜ கவில் இணைந்து இருக்கிறார்.

Advertisement