இத பண்ணலன்னா எல்லார் மீதும் நடவடிக்கை எடுப்பேன் – கூலி படத்துக்கு இளையராஜா நோட்டீஸ்.

0
369
- Advertisement -

ரஜினி- லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு எதிராக இளையராஜா அனுப்பி இருக்கும் நோட்டீஸ் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், கடந்த சில வருடங்களாக ஹிட் படத்தை கொடுக்க ரஜினி போராடி வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் மோகன் லால், ஜாக்கி ஷராப், சிவராஜ்குமார், விநாயகம் என்று பலர் நடித்து இருந்தனர். இதனால் இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என்று பேன் இந்தியா அளவில் வெற்றியை கண்டது. இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. மேலும், ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியின் 170வது படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குகிறார்.

- Advertisement -

வேட்டையன் படம்:

இந்த படத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ஃபஹத் சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தினுடைய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினி அவர்கள் காவல் அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

லோகேஷ்-ரஜினி கூட்டணி:

இதை அடுத்து ரஜினி அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே வெளியாகியிருந்தது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அதோடு சில வாரங்களுக்கு முன்புதான் இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வந்தது. அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த போஸ்டரில் ரஜினி தன்னுடைய கைகளில் தங்க கடிகாரம் கை விலங்கு அணிந்திருந்தார். அதோடு இந்த படத்தில் இவர் தாதா வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

கூலி படம் குறித்த தகவல்:

இந்த படத்திற்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் ரஜினிக்கு மகளாக சுருதிஹாசன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தினுடைய அறிமுக வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. தற்போது இந்த வீடியோ குறித்த சர்ச்சை தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தங்கமகன் படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். அந்த இசையை தற்போது ரஜினி நடிக்கும் கூலி படத்திற்கு அனிருத் பயன்படுத்துகிறார்.

இளையராஜா அனுப்பிய நோட்டீஸ்:

ஏற்கனவே சில மாதங்களாக இளையராஜா, தான் இசையமைத்த பாடல்கள் முழுவதுமே தனக்கு மட்டும்தான் சொந்தம். தன்னுடைய அனுமதி இல்லாமல் யாரும் நிகழ்ச்சிகளிலோ, படங்களிலோ பயன்படுத்தக்கூடாது. அதற்கான காப்புரிமையை செலுத்தி விட்டு தான் பயன்படுத்தனும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் அனிருத் ரஜினியின் படத்தில் பயன்படுத்தியிருப்பதற்கு இளையராஜா அவர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதோடு இதற்கான உரிய அனுமதியை பெற வேண்டும், இல்லை என்றால் டீசரில் இருந்து அந்த பாடலை நீக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தனக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் தான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement