ஆஸ்திரேலிய மைதானத்தில் இந்திய ரசிகர்களின் வேண்டுகோளுக்காக ‘புட்ட பொம்மா’ ஸ்டெப் ஆடிய வார்னர் – வைரலாகும் வீடியோ

0
2239
butta
- Advertisement -

தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ என்று தன் ரசிகர்களால் பாசத்துடன் அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த ஆண்டு சங்கராந்தி பண்டிகைக்கு வெளி வந்த படம் தான் ‘அல வைகுந்தபுரமுலோ’. அந்த படத்தினை டோலிவுட்டில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கியிருந்தார். இதில் ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பிரபல ஹீரோயின்ஸ் பூஜா ஹெக்டே மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகிய இருவரும் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று மெகா ஹிட்டானது. மேலும், பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து இருந்தது. பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பெற்றிருக்கிறது. குறிப்பாக ‘புட்ட பொம்மா’ என்ற பாடல் அதிக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் ஆனது.

- Advertisement -

அதிலும் இந்த பாடல் டிக் டாக் செயலியில் பலரும் போட்டு டான்ஸ் ஆடி வீடியோவாக வெளியிட்டு இருந்தனர். யூடுயூபிலும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. ரசிகர்களை தாண்டி இந்த பாடலுக்கு பலர் பிரபலங்களும் நடனமாடி வீடியோ வெளியிட்டு இருந்தனர். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் இந்த பாடலுக்கு தனது குடும்பத்துடன் நடனமாடி வீடியோ பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் இன்று (நவம்பர் 27 ) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்த போட்டிக்கு இடையே டேவிட் வார்னர் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டு இருக்கும் போது இந்திய ரசிங்கர்கள் சிலர் இந்திய ரசிகர்கள் டேவிட் வார்னர் நோக்கி “புட்டபொம்மா” பாடலுக்கு நடனமாடி தங்களது வேண்டுகோளை வைத்தனர்.  கேட்ட டேவிட் வார்னரும் அவர்களுக்காக மைதானத்திலேயே “புட்டபொம்மா”ஸ்டெப்பை போட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement