பாப் கட், சிகப்பு நிற சீருடை.! கசிந்தது விஜய் 63-ல் இந்துஜாவின் லுக்.!

0
1064
Indhuja
- Advertisement -

சர்க்கார் படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் அட்லீ இயக்க படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், யோகி பாபு, விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த படத்தில் மேயாத மான் புகழ் இந்துஜாவும் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பில் இந்துஜா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்துஜா சிகப்பு நிற கால்பந்து சீருடையில் இருக்கிறார்.

- Advertisement -

எனவே, இந்துஜா, விஜய்யின் அணிக்கு கீழ் இந்த படத்தில் ஒரு கால் பந்து வீராங்கனையாக நடிக்கிறார் என்றும் நம்பப்படுகிறது. அதே சமயம் அதிகாரபூர்வமான ஒரு செய்தி ஒன்றை விஜய் மேனேஜர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் அதில், தொடர்ந்து 70 நாட்களுக்கு மேலாக தளபதி63 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது 4வது கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம்.

எங்களின் கடினமான உழைப்பு முழுக்க திரையரங்கங்களில் ரசிகர்கள் படத்தை கொண்டாடுவதற்காகதான். படம் குறித்த அறிவிப்புகள், அடுத்தடுத்த செய்திகள் தக்க நேரத்தில் வெளியாகும். அதுவரை பொறுமையாக காத்திருங்கள். படம் வெளியாகும் வரை வதந்திகளை நம்பாதீர்கள்.

-விளம்பரம்-
Advertisement