இந்தியா – பாகிஸ்தான்.! வான்வழிப் படைப்பிரிவில் பலசாலி யார்.?

0
647
India-vs-Pakistan
- Advertisement -

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்திய விமானப்படை பாகிஸ்தானில் புகுந்து ஜெய்சி தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 300 கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அழிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் பதட்டம் நிலவி வருகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் வான்வழி படையில் யார் பலசாலி என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. எண்ணிக்கையிலும் சரி தரத்திலும் சரி பாகிஸ்தானை விட இந்தியாவே எல்லா போர் படைகளிலும் சிறந்ததாக கருதப்படுகிறது.

- Advertisement -

கடந்த 2014 ஆம் ஆண்டு 33 படைப்பிரிவுகளை கொண்டுள்ள இந்தியா தற்போது 44 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், பாகிஸ்தானிடம் 25 லிருந்து 30 வரை மட்டுமே உள்ளது. ஒரு படைப் பிரிவில் 12லிருந்து 24 வரை விமான போர் பயன்படுத்தப்படும். எல்லா போர் விமானங்களும் ஒரே நேரத்தில் போருக்குச் செல்லாது.

மூன்றில் ஒரு பங்கு பழுது பார்க்கவும் பராமரிக்கவும் முகாமிலேயே இருக்கும். ஜெட், ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் ஆகியவைகளைக் கொண்ட விமானப் படைப் பிரிவில் எண்ணிக்கையில் இந்தியாவிடம் 2200ம் பாகிஸ்தானிடம் 1200ம் உள்ளது.

-விளம்பரம்-

பாகிஸ்தான் தற்போது f7 airguard மற்றும் mirrage 111 & 5 ரக போர் விமானங்களை பயன்படுத்தி வருகிறது.மேலும்,சீனாவுடன் இணைந்து JF 17 என்ற இலகு ரக போர் விமானங்களை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ள இந்தியா MIG ரக போர் விமானங்களை பயன்படுத்தி வருகிறது. MIG 29 ரக போர் விமானங்கள் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளைத் தவிர்த்து உலகிலேயே இந்தியா மட்டுமே பயன்படுத்துகிறது. MIG 27 ரக போர் விமானங்கள் துல்லியமாகவும் கணிசமான அளவு தாக்குதல் நடத்தவும் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது எனவே, இந்தியா பாகிஸ்தானை விட எல்லா விதத்திலும் சிறப்பாகவே உள்ளதாக கருதப்படுகிறது.

Advertisement