ஏ.ஆர்.ரகுமானுக்கு டாட்டா.! இந்தியன்-2 இசையமைப்பாளர் இவர் தான்..! வெளியான ரகசிய அப்டேட்.!

0
1084
indian-2

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த “இந்தியன் ” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டவது பாகத்தில் நடிக்க உலகநாயகன் கமலஹாசன் தயாராகி வருகிறாராம். இந்த படத்தில் இளம் இசையமைப்பாளர் தான் இசையமைக்க உள்ளாராம்.

anirudh

நடிகர் கமல் சமீபத்தில் நடித்து வந்த “பலராம் ” நாயுடு திரைப்படம் சில பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நடிகர் கமல் தற்போது அரசியலில் தீவிரம் காட்டி வருவதால் படங்களில் நடிப்பதை கொஞ்சம் தள்ளி வைத்தார்

இந்நிலையில் இந்தியன் 2 வின் வேலைகள் விரைவில் தொடங்கவிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு பதிலாக இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளாராம்.

ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து எடுக்கவுள்ள படத்திலும் இசையமைப்பாளராக காமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது குறித்து அதிகார தகவல் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.