அமெரிக்காவில் தீவிர ரசிகரின் வீட்டின் முன்பு அமிதாப்பச்சனின் சிலை வைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அமிதாபச்சன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அன்றும் இன்றும் என்றும் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகவே திகழ்ந்வர் என்று சொல்லலாம்.
இவர் 1970 களில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக கருதப்பட்டார். இவருடைய நடிப்பு திறமைக்கு தேசிய விருது, பிலிம்பேர் என பல விருதுகளை வாங்கி இருக்கிறார். மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர் என பன்முகம் கொண்டு இருக்கிறார்.
அமிதாப்பச்சன் குடும்பம்:
இவர் நடிகை ஜெயபாதூரியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்வேதா நந்தா மற்றும் அபிஷேக் பச்சன் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இவருடைய மகன் அபிஷேக் பச்சனும் தன் தந்தையைப் போலவே பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் உலக அழகி ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் ஒரு மகள் இருக்கிறார்.
அமிதாப்பச்சன் குறித்த தகவல்:
இது ஒரு பக்கம் இருக்க, அமிதாபச்சன் அவர்களுக்கு மும்பையில் பல்வேறு இடங்களில் சொந்த பங்களாக்கள் உள்ளன. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. இவர் தங்கியிருக்கும் வீடு மட்டுமே 10 ஆயிரம் சதுர அடிக்கு மேல் பரப்பளவு கொண்டது. அந்தளவிற்கு பிரம்மாண்டமான வீட்டை கட்டி இருக்கிறார். இவர் மும்பையில் வைத்திருக்கும் பல வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கிறார். சமீபத்தில் கூட பிரபல நடிகைக்கு அந்தேரியின் மேற்கு பகுதியில் லோகண்ட் வாலா சாலையில் உள்ள அட்லாண்டிஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 27 மற்றும் 28வது மாடியில் உள்ள டூப்ளக்ஸ் வீட்டை வாடகைக்கு விட்டு இருக்கிறார்.
அமிதாப்பச்சன் தீவிர ரசிகர்:
அதுமட்டுமில்லாமல் நடிகர் அமிதாப்பச்சன் ஜூஹுவில் உள்ள தனது இடத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு வாடகை கொடுத்துள்ளாராம். இப்படி தன்னுடைய இடங்களை அமிதாப்பச்சன் வாடகைக்கு விட்டு அதன் மூலம் சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில் அமிதாப்பச்சனின் சிலையை தீவிர ரசிகர் ஒருவர் தன்னுடைய வீட்டின் முன்பு வைத்திருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. கோபி சேத் என்பவர் குஜராத்தை சேர்ந்தவர்.
அமிதாப்பச்சனின் சிலை:
இவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அமிதாப்பச்சின் மிகத் தீவிரமான ரசிகர். தற்போது இவர் ராஜஸ்தானில் இருந்து அமிதாப்பச்சனின் முழு உருவ சிலையை வடிவமைத்து அமெரிக்காவில் உள்ள தன்னுடைய வீட்டின் முன்பு வைத்திருக்கிறார். அந்த சிலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் பங்கேற்றது போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சிலை சுமார் 60 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.