மருத்தகங்களில் நடக்கும் தவறான செயல்கள் குறித்து சத்யராஜ் மகள், ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற ஒரு மகனும் மற்றும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜ் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் திவ்யா அப்படி இல்லை. சின்ன வயதில் படங்களில் நடிக்க ஆசை பட்டாலும் பின்னர் வேறு துறைக்கு மாறிவிட்டார் திவ்யா.
தனது அப்பாவினை போலவே இவரும் ஒரு நாத்திகவாதி. இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிசனிஸ்ட்களில் ஒருவர் சத்தியராஜ் மகள் திவ்யா. நியூட்ரிஷன் துறையில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் நியூட்ரிஷன் துறையில் பல கான்பெரன்ஸ் நடத்தியுள்ளார். அடிக்கடி ஊட்டச்சத்து குறித்த பல பயனுள்ள பதிவுகளை திவ்யா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். ஆனால், இது வரை எந்த ஒரு வீடியோவையும் பதிவிட்டதில்லை.
இப்படி ஒரு நிலையில் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முக்கியமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது என்னுடைய முதல் வீடியோ. வீடியோக்கள் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால் முக்கியமான விஷயங்களைப் பற்றி நாம் அமைதியாக இருந்தால் வாழ்க்கை அர்த்தமற்றது. இதைச் சொல்ல வேண்டியிருந்தது. என்னுடைய நோயாளி ஒருவர் மருந்து வாங்குவதற்காக மருந்தகத்திற்குச் சென்றிருந்தார். அவர் வாங்கிய 4 மருந்துகளில் 3 மருந்துகள் காலாவதியானவை.
பல மருந்தகங்களில் இது பலமுறை நடந்துள்ளது. காலாவதியான மருந்துகளைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கும் மருந்துகளை வாங்குவதற்கு முன், காலாவதி தேதியை சரிபார்க்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மருத்துவ அலட்சியம் மற்றும் மருத்துவ முறைகேடு குற்றமாகும். உயிரைக் காப்பாற்றுவதற்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மருத்துவம் பொறுப்பாக இருக்க வேண்டும்.
ஆனால், அது ஒரு அசிங்கமான அரக்கனாக மாறுகிறது. மக்கள் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் மருந்துகளை வாங்குகிறார்கள் என்பதை மருந்தக உரிமையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தயவு செய்து அவர்களின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க வேண்டாம். மனித நேயத்தை விட பணம் ஒருபோதும் முக்கியமானதாக இருக்க முடியாது. தயவு செய்து காலாவதியான மருந்துகளை அப்புறப்படுத்த ஒரு அமைப்பை ஏற்படுத்துமாறு மருந்தகங்களை கேட்டுக்கொள்கிறேன்