நூதன முறையில் மைதானத்திற்குள் மது பாட்டிலை கொண்ட சென்ற ரசிகர்கள்.! வைரல் வீடியோ.!

0
924
Ind-Vs-england

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி பிரமாதமாக விளையாடி வருகிறது. உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் கடந்த ஜூன் 30 ஆம் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

Marwin Bliss ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಜುಲೈ 1, 2019

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 337 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் குவித்து தோல்வியை தழுவியது.

இதையும் பாருங்க : அடடடா.! ஜீவா படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தங்கையாக நடித்த நடிகை கொடுத்த போஸ்.! 

- Advertisement -

இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைத்தனத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு ரசிகர்கள் குவிந்திருந்தனர். இந்த நிலையில் இந்த போட்டியை காண வந்த இந்திய ரசிகர்கள் சிலர் மைதானத்திற்குள் மது பாட்டில்களில் நூதன முறையில் கொண்டு சென்றுள்ள சில விடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பொதுவாக கிரிக்கெட் அரங்கத்திற்குள் மதுபான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது . ஆனால் இந்த போட்டியின் போது ரசிகர்கள் சிலர் பண்ணுக்கு உள்ளேயும் பைனாகுலர் உள்ளயேயும் மது பாட்டில்களை ஒளித்து வைத்து கொண்டு சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement