கல்யாண நேரத்தில் இப்படி எல்லாம் பேசாதீங்க-வேதனையில் ரோபோ சங்கர் மகள் அளித்த பேட்டி

0
215
- Advertisement -

திருமணம் ஆகும் நேரத்தில் இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்று வருத்தப்பட்டு இந்திரஜா அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். இவர் குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து’
இருக்கிறார். முதலில் இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் தான் பங்கேற்றார்.

-விளம்பரம்-

அதன் பின் தான் இவர் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் இந்திரஜா. இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லலாம். அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

ரோபோ ஷங்கர் மகள்:

தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் தன்னுடைய முறை மாமனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து பலரும், அவரை தான் நீங்கள் திருமணம் செய்ய போகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு இந்திரஜா, ஆமாம், திருமணம் குறித்து விரைவில் தகவல் வரும் என்று கூறியிருக்கிறார். இவர் திருமணம் செய்யும் நபர் கார்த்திக்.

-விளம்பரம்-

திருமண நிச்சயதார்த்த நிகழ்வு:

இவர் மதுரை சேர்ந்தவர். தொடர்வோம் என்ற அமைப்பின் நிறுவனர். தற்போது இவர் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ரோபோ சங்கரின் உறவினர் ஆவார். சமீபத்தில் தான் இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றது. இதில் ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு நெருக்கமான உறவினர்கள் ரோபோ கலந்து கொண்டிருக்கிறார்கள். இதை அடுத்து ஒரு வாரத்திற்கு முன்பே இவர்களுடைய திருமண கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டது. அதிலும் கடந்த வாரம் நடந்த ஹல்தி ஃபங்ஷனில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திருந்தார்கள்.

இந்திரஜா பேட்டி:

இவர்களுடைய திருமணம் இன்று மதுரையில் நடைபெறுகிறது. வரவேற்பு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் youtube சேனல் ஒன்றுக்கு இந்திரஜா பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், ஹல்தி ஃபங்சன் நடந்த போது பலர் என்னை திட்டினார்கள். இது வடமாநிலத்தில் கொண்டாடும் விழா, நீங்கள் ஏன் செய்கிறீர்கள்? கலாச்சாரம் எங்கே போச்சு? ஓவர் சீன் போடாதீங்க? என்று பயங்கரமாக கமெண்ட் போட்டு இருந்தார்கள். நான் ஹெல்தி பங்க்ஷன் வைத்ததற்கு காரணம் என்னவென்றால் பொதுவாகவே நலங்கு பெரியவர்கள் தான் வைப்பார்கள். ஆனால், இந்த ஹல்தியில் அப்படி கிடையாது.

மன வருத்தத்தில் இந்திரஜா :

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே வைக்கலாம். அதில் அனைவருமே ஜாலியாக ஆட்டம் போட்டு என்று இருந்தார்கள். அந்த ஆறு மணி நேரம் என்னால் மறக்கவே முடியாது. இப்படி இருக்கும்போது கமெண்டில் பலரும் என்னை இருந்ததை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. எனக்கு கல்யாணம் ஆகும் நேரத்தில் இந்த மாதிரி கமெண்ட்களை பார்க்க மனசு வலிக்குது. இந்த நேரத்தில் நான் நடிகையாக இருப்பதை நினைத்து வருத்தப்படுகிறேன். காரணம், நடிகர்களுடைய வாழ்க்கை ரொம்பவே பப்ளிக் ஆகிவிட்டது. யார் வேண்டுமானாலும் திட்டலாம், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த வீடியோவை ஏன் பார்க்கிறீர்கள்? அந்த வீடியோவை பார்க்கலாமே விட்டு விடுங்கள். ஒருவரை மோசமான வார்த்தைகளால் திட்டுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? எனக்கு திருமணம் ஆகப்போகிறது தயவு செய்து மனமதார வாழ்த்துங்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement