பிளாட்பாரத்தில் இட்லி விற்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- அடடே இவரா, வைரலாகும் வீடியோ

0
381
- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் பிளாட்பாரத்தில் இட்லி விற்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். முத்து தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான் என்பதால் சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது கோபம் இருக்கிறது. உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஒரு வழியாக ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

கடந்த வாரம் சீரியலில் முத்துவிற்கு பெரிய மாலை ஆர்டர் கிடைக்கிறது. அதை முத்து- மீனா இருவரும் பல போராட்டங்களுங்கு பின் செய்து முடிக்கிறார்கள். மாலை ஆர்டர் மூலம் கிடைத்த பணத்தில் முத்துவிற்கு தெரியாமல் சர்ப்ரைஸ் ஆக மீனா கார் வாங்கிக் கொடுக்கிறார். வழக்கம்போல் இதை விஜயா, மனோஜ் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் ரோகினிக்கு பயம் ஏற்படுகிறது. பின் மனோஜ்க்கும் ஒரு தொழில் வைத்து தர சொல்லி ரோகினியிடம் பேசுகிறார் விஜயா. இன்னொரு பக்கம் சுருதி- ரவியை தன் வீட்டிற்க்கே கொண்டு வர வேண்டும் என்று சுருதியின் அம்மா-அப்பா திட்டம் போடுகிறார்கள்.

சீரியல் கதை:

இதனால் ஸ்ருதி -ரோகினிக்கு தாலி பிரித்து கொடுக்கும் பங்க்ஷன் நடைபெற இருக்கிறது. இந்த பங்க்ஷனில் ஸ்ருதி-ரவியை பிரித்து வர ஸ்ருதியின் அம்மா திட்டம் போடுகிறார். இதற்கு ஏற்ப ஸ்ருதி அப்பாவின் நண்பர் ஒருவர் அண்ணாமலை இடம் அவமரியாதை குறையாக நடக்கிறார்கள். இதை முத்து பார்க்கிறார். இனி வரும் நாட்களில் ஸ்ருதியின் அம்மா திட்டம் நிறைவடைந்தா? முத்து என்ன செய்தார்? பங்க்ஷன் நல்லபடியாக நடந்ததா? போன்ற பல அதிரடி சுவாரசியங்களுடன் சிறகடிக்க சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

செல்வம் கதாபாத்திரம்:

மேலும், இந்த சீரியலில் முத்துவின் நண்பராக செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் பழனியப்பன். இந்த சீரியலின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதோடு இவருடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சீரியலில் இவர் முத்துவுக்கு எல்லா சமயங்களிலும் உறுதுணையாக இருக்கிறார். இந்த நிலையில் பழனியப்பன் குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்வம் வீடியோ:

அதில் செல்வம் பழனியப்பன் இட்லி கடையில் வியாபாரம் பார்ப்பது போல இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள், நீங்கள் இட்லி வியாபாரம் செய்கிறீர்களா? என்னாச்சு? உங்கள் கடையா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு பழனியப்பன், இல்லை. இது சென்னையில் உள்ள என்னுடைய நண்பனின் ஒரு கடை. அவருக்கு நான் உதவி செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். சீரியல் மட்டும் இல்லாமல் நிஜத்திலுமே செல்வம் தன்னுடைய நண்பருக்காக உதவி செய்வதை குறித்து ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்

Advertisement