ஜோசப் விஜய், கழுத்தில் சிலுவை போட்டு இருக்கிறார் – அரபிக் குத்து பாடல் குறித்து பதிவிட்ட இந்து மக்கள் கட்சி. ரசிகர்கள் கொடுத்த பதிலடி.

0
1106
vijay
- Advertisement -

பீஸ்ட் படத்தில் விஜய் கழுத்தில் சிலுவை போட்டிருக்கிறார் என்று இந்து மக்கள் கட்சி விமர்சித்ததற்கு அது நங்கூரம் என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்யும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆஃபிஸில் இடம்பெறும். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் தீம் மியூசிக் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதேபோல் இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக எழுதியிருக்கிறார்.

- Advertisement -

விஜய்யின் அரபி குத்து பாடல்:

நெல்சன் – சிவர்கார்த்திகேயன்-அனிருத் கூட்டணியில் வெளியான டாக்டர் படத்தில் செல்லமா’ பாடலும் ‘ஓ பேபி’ பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அதே பாணியில் பீஸ்ட் படத்தில் நெல்சன்- அனிருத்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி இருக்கும் அரபிக் குத்து பாடல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும், பாடல் வெளிவந்து சில மணி நேரங்களிலேயே சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்தது. இந்த பாடல் வெளியானது தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

அரபி குத்து பாடலின் சர்ச்சை:

இந்த நிலையில் அரபி குத்து பாடலில் விஜய் கழுத்தில் சிலுவை அணிந்து இருக்கிறார் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் சோசியல் மீடியாவில் விவாதம் செய்து இருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பது, விஜய் சிலுவை அணிந்து இருப்பது வரவேற்கத்தக்க அறிகுறி. அவர் தன்னுடைய மத அடையாளத்தை தைரியமாக வெளிப்படுத்துகிறார். அதில் என்ன தவறு. ஐஎம்கே இதை வரவேற்கிறது. இந்தியாவில் அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளது. தேவையற்ற பிரச்சாரங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்கள். ஆனால், உண்மையில் அரபி குத்து பாடலில் 2.27வது நிமிடத்தில் விஜய், நெல்சன், அனிருத் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் காட்சி மற்றும் பிற காட்சிகளில் விஜய் கழுத்தில் இருக்கும் செயினில் நங்கூரம் போன்றதே இடம்பெற்றிருப்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

விஜய் படம் பிரச்சனை:

இதை இந்து மக்கள் கட்சி சிலுவை என்று சொல்லி விமர்சித்து இருக்கும் பதிவை பார்த்து நெட்டிசன்கள், ரசிகர்கள் எல்லாம் கொந்தளித்து போய் விஜய் அணிந்திருப்பது சிலுவை அல்ல, நங்கூரம் தான் என்று கமென்ட் போட்டு ரோல் செய்து வருகின்றனர். அதற்கு சிலர், அது நங்கூரம் வடிவில் இருக்கும் சிலுவை என்று பதிவிட்டிருக்கிறார். இதேபோல் மெர்சல் படத்தில் உருவான சர்ச்சையால் நடிகர் விஜயின் பெயரை பாஜக மற்றும் சில இந்து அமைப்புகள் ஜோசப் விஜய் என அழைத்து வருகிறார்கள். அதன்பிறகு பிகில் படத்தில் விஜய் நடிகராக இருந்தாலும் அவரை சுற்றி இஸ்லாமிய, இந்து என அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக காண்பிக்கப்பட்ட காட்சியும் சோசியல் மீடியாவில் பேசு பொருளானது.

விஜய் சிலுவை குறித்து வரும் ட்ரோல்:

இப்படி விஜய் குறித்து ஏதாவது ஓரு சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள். அந்தவகையில் தற்போது சில வாரங்களாகவே கர்நாடகாவில் நடக்கும் ஹிஜாப் விவகாரத்தில் தமிழ்நாட்டில் விஜயின் அரபி குத்து பாடலை குறிப்பிட்டு மீம்ஸ் மற்றும் ட்ரோல் பதிவுகள் வைரலாகி வருகிறது. இதனால் அரபி குத்து பாடல் விஜய் அணிந்திருக்கும் நங்கூரம் வடிவிலான சிலுவை இருப்பதாக சொல்பவரைகளை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அப்படியே சிலுவையாக இருந்தாலும் இது என்ன பிரச்சனை? ஏதாவது ஒன்றைச் சொல்லி ஏன் சர்ச்சையாக்குகிறீர்கள்? நாட்டில் எப்படியாவது மதக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு என்றே ஒரு கும்பல் திரிகின்றது என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இதற்க்கு விஜய்யின் பீஸ்ட் படக்குழுவினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement