""
-விளம்பரம்-
Home செய்திகள்

அங்க என்ன கெனரா நோன்றாங்க – பிரபல காமெடி நடிகரின் தற்போதைய நிலை. நடிப்பில் இருந்து விலக காரணம்.

0
140
-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் பழம்பெரும் நடிகராக இருந்தவர் சீனிவாச அய்யர். இவரை மேனேஜர் சீனா என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். இவர் நாடகத் துறையின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். முதலில் இவர் பி அண்ட் சி மில்லில் 28 ஆண்டுகளாக சூப்பர்வைசராக பணியாற்றி இருந்தார். அப்போது தான் இவருக்கு நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு இவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நடித்தார். பின் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு வந்தது

-விளம்பரம்-

இவர் 1975 ஆம் ஆண்டில் நடிகர் வி கோபாலகிருஷ்ணனின் ராஜயோகம் என்ற நாடகத்தில் மேனேஜர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தின் மூலம் இவர் பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டார். அன்றிலிருந்து தான் இவருக்கு மேனேஜர் சீனா என்ற பெயர் வந்தது. அதற்கு பிறகு இவர் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். இவர் இதுவரை 3800-க்கும் மேற்பட்ட நாடகங்கள், என்பதுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார்.

மேனேஜர் சீனா திரைப்பயணம்:

இவருடைய நாடகங்கள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளிலும் நடந்திருக்கிறது. மேலும், இவருடைய நடிப்பிற்காக பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். 30 வருடங்களுக்கும் மேலாக இவர் சினிமா, நாடகத்தில் நடித்து இருக்கிறார் தற்போது இவருக்கு 80 வயதிற்கு மேல் ஆகிவிட்டது. வயது மூப்பின் காரணமாக இவர் படங்களிலிருந்து நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இவருடைய மனைவி சமீபத்தில் தான் இறந்தார்.

மேனேஜர் சீனா குறித்த தகவல்:

-விளம்பரம்-

தற்போது இவர் தன்னுடைய ஒரே ஒரு மகனுடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக வீடு இருக்கிறது. ரொம்ப எளிமையானவர். படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஆட்டோ, ஷேர், பஸ்ஸில், ரயிலில் தான் செல்வார். அது மட்டும் இல்லாமல் இவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரும் ஆவார். பின் இவர் கூடைப்பந்து விளையாட்டு வீரராகவும் இருக்கிறார். தற்போது இவர் தன்னுடைய கடைசி காலத்தை மகனுடன் கழித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மேனேஜர் சீனா பேட்டி அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேனேஜர் சீனா பேட்டி:

அதில் அவர், நான் முதல் முதலாக நடித்த நாடகத்தில் மேனேஜர் கதாபாத்திரத்தில் நடித்தேன். அப்போதிலிருந்து தான் மேனேஜர் சீனா என்ற பெயர் வந்தது. என்னுடைய பெயர் சீனிவாசன். மேடை நாடகங்கள் மூலம் தான் எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நிறைய நடங்களில் நடித்திருக்கிறேன். இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் நாடகங்களில் நடித்திருக்கிறேன். படங்களில் வாய்ப்புகள் வருகிறது. ஆனால், நான் நடிக்கவில்லை. காரணம் வயதாகிவிட்டது. டயலாக் எல்லாம் மனப்பாடம் செய்து சொல்ல முடியாது. அப்படி நம்ம சொல்லும்போது ஏதாவது தவறு நடந்துவிட்டால் திட்டி விடுவார்கள்.

சினிமா குறித்து சொன்னது:

என்னடா இவன் இப்படி பண்ணுறான், இவன் சீனியர் நடிகனா என்று சொல்லி விடுவார்கள். அதனால் தான் எதற்கு என்று நான் நடிப்பதை நிறுத்தி விட்டேன். இப்போது நான் என்னுடைய ஒரே ஒரு மகனுடன் தான் வசித்து வருகிறேன். என்னுடைய தேவைக்கு தேவையான படத்தை நான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அக்கவுண்டில் சேர்த்து வைத்திருக்கிறேன். யாரிடமும் கைநீட்டி ஒரு ரூபாய் வாங்கும் நிலையில் நான் இல்லை. என் மகனிடமே எனக்கு செலவுக்கு கொடு என்று கேட்க மாட்டேன். ஆண்டவன் என்னை நன்றாக தான் வைத்திருக்கிறான். இவ்வளவு வயதிலும் என்னை ஆரோக்கியமாக தான் வைத்திருக்கிறான். கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news