கொரோனா காலத்தில் விஜய் மக்கள் இயக்கம் செய்த மகத்தான உதவி. வைரலாகும் புகைப்படம்.

0
663
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதனால் தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கும் அமுலுக்கு வந்துள்ளது. இந்த கொடிய வைரஸால் பல லட்சம் பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க, பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் கொரோனா அதிகமாக பாதித்து வரும் குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இதனால் நோயாளிகள் அவதிப்படுவதும், உயிரிழப்புகள் அதிகமாகாவதும் நிகழ்ந்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக் குறை குறித்து பேசிய நீதிபதி ஒருவர், மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று.

- Advertisement -

இதை மத்திய அரசாங்கம் சரியாக செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கு பிச்சை எடுத்தோ, திருடியோ, கடன் வாங்கியோ, அல்லது பணம் கொடுத்தோ, எதையோ செய்து, நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் சப்ளை செய்யுங்கள்,” என்று கூறினர்.இப்படி கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாமல் பல ஆயிரம் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது இது போல உதவிகளை செய்வது வழக்கம் தான். இப்படி ஒரு நிலையில் தற்போது ஆகிசிஜன் தட்டுப்பாடு இருப்பதை உணர்ந்து விஜய் ரசிகர்கள் செய்துள்ள இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement