தொடங்கியது ஐபிஎல் ஏலம்..!எந்த அணி எத்தனை நபர்களை எடுக்கலாம்..!லேட்டஸ்ட் அப்டேட்..!

0
435
ipl-auction

ஐபிஎல் தொடரின் 11 ஆம் சீசன் சிலமாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி 3 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபில் தொடரின் ஏலம் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

பொதுவாக ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தான் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடக்கும். ஆனால் இந்த முறை டிசம்பர் மாதம் அதாவது இன்றே  18 ஆம் தேதி ஐபிஎல் ஏலம் ஜெய்பூரில் தொடங்கியது. 

இதையும் படியுங்கள் : விருது விழாவில் சஞ்சீவ் – மானசா செய்த செயல்..!புதுசா காதலிச்சாலும் அதுக்குன்னு இப்படியா..!

- Advertisement -

சென்ற ஆண்டு வரை காலை 9 – மாலை 6 வரை ஏலம் நடக்கும். இம்முரை மதியம் 3 – 9.30 மணியாக மாற்றியுள்ளது. இதற்கு முக்கிய காரணமே ஏலத்தை ரசிகர்கள் அனைவரும் தொலைகாட்சியில் கண்டு களிக்கலாம் என்பதற்காக தானம்.இந்நிலையில் எந்தெந்த அணி எத்தனை வீரர்களை எடுக்கலாம் என்பதை பார்ப்போம்.

சென்னை : 
ரூ.8.4 கோடியை இருப்பு வைத்துள்ள சிஎஸ்கே அணி இன்னும் இரண்டே இரண்டு இந்திய வீரர்களை மட்டுமே எடுக்க முடியும் 

-விளம்பரம்-

பெங்களூரு: 
இன்னும் 8 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு
வீரர்களை எடுக்கலாம்.

மும்பை : 
6 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் என மொத்தம் 7 பேரை எடுக்கலாம்.

பஞ்சாப் :
4 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 11 இந்திய வீரர்கள் என மொத்தம் 15 வீரர்களை எடுக்கலாம்.

ராஜஸ்தான் :
8 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 10 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்.

கொல்கத்தா : 
7 இந்திய வீரர்கள் மற்றும் 5 வெளிநாட்டு வீரர்களை எடுக்கலாம்.

டெல்லி :
7 இந்திய வீரர்கள் மற்றும் 3 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 10 வீரர்களை எடுக்கலாம்.

சன்ரைசர்ஸ் : 
3 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 5 வீரர்களை எடுக்கலாம். Advertisement