லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இரண்டாம் பாடல் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது அந்த பாடல் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது.
அனிருத் அண்ணே நீ கிங் னே கைப்பிள்ளை bgm ah எடுத்து கைப்பிள்ளை க்கே போட்ட பாரு 😂😂#JailerHistoricBO#JailerHistoricSuccess #superstarrajinikanth#Thalaivar pic.twitter.com/aP06ImLPbK
— Mani (@Mani74261081) September 27, 2023
இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய் படம் என்றாலே பலரும் எதிர்பார்ப்பது அவருடைய இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தான். அதிலும் நிகழ்ச்சியில் அவர் சொல்லும் குட்டிக்கதை ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? என்றுதான் சமீப காலமாகவே ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
💭 #Badass kaipulla theme https://t.co/sAxvCJNJc3
— BACKSTAGE KK (@backstagengl) September 28, 2023
இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், இசை வெளியீட்டு விழாவிற்கான பாஸ்கள் கூட தயாராகி இருந்தது. மேலும், விழா நடைபெறுவதர்க்காக மேடை எல்லாம் கூட போடப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் கூட சமூக வலைதளத்தில் வைரலானது.
இப்படி ஒரு நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்து இருந்தது. இதுகுறித்து வெளியிடபட்ட அறிவிப்பில் ‘பாஸ்கள் கேட்டு அதிகப்படியான கோரிக்கைகள் வருவதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் `லியோ’ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம். பலர் நினைப்பது போல இதில் அரசியல் அழுத்தங்களோ மற்ற காரணங்களோ கிடையாது’ என்றும் கூறி இருந்தது.
Copy Cat#ThiruppathiVantha × #NaaReady
— DasaNDropZz | Vidaamuyarchi 😈 (@DasaN_DropZz) June 23, 2023
Ippo sollungada yaaru No.1 nu
This is #AjithKumar Territory#Vidaamyarchi #MyDearAJITHKUMAR pic.twitter.com/SOnPIVbb0u
இதனிடையே இந்த படத்தின் இரண்டாம் பாடல் இன்று மாலை வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை கேட்ட பலரும் வின்னர் படத்தில் வடிவேலு நடித்த கைப்புள்ள கட்சியுடன் ஒப்பிட்டு கேலி செய்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடலான நான் ரெடி தான் பாடலும் அஜித் நடித்த திருப்பதி படத்தின் பாடலின் காபி போல இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்து என்பது குறிப்பிடத்தக்கது.