சித்தா படத்தின் பிரஸ் மீட்டிங்கில் கன்னட அமைப்பினர் பிரச்சனை செய்து சித்தார்த்தை மிரட்டி வெளியேற்றிருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை, எழுத்தாளர் என பன்முகம்கொண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
சமீப காலமாகவே சித்தார்த் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சித்தா. இந்த படத்தை ETAKI ENTERTAINMENT நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
பிரஸ் மீட்டில் நடந்தது:
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை பற்றி இந்த படம் பேசியிருக்கிறது. மேலும், இந்த படத்தை கன்னடத்தில் சிக்கும் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் சித்தார்த் அவர்கள் கர்நாடகாவிற்கு சென்று இருக்கிறார். பின் பெங்களூரு எஸ் ஆர் வி திரையரங்கில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு சித்தார்த் பேசியிருக்கிறார். அப்போது கழுத்தில் சிவப்பு- மஞ்சள் நிற துண்டு போட்ட கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர் பிரஸ்மீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார்கள்.
கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர் மிரட்டல்:
அப்போது மேடையில் சித்தார்த் தனியாக அமர்ந்து கொண்டு படம் குறித்து பேசி இருக்கிறார். இதை பார்த்த கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர் சித்தார்த்தை மிரட்டி இருக்கின்றனர். பின் அந்த அமைப்பினர், தண்ணீர் தமிழ்நாட்டுக்கு போகிறது. நீங்கள் படம் பத்தி பேசுகிறீர்களா? என்று சித்தார்த்தை பார்த்து ஆவேசமாக பேசி இருக்கின்றனர். இருந்தாலும் முதலில் சித்தார்த் கண்டுகொள்ளாமல் அமைதியாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த கன்னட அமைப்பினர் மேடைக்கு முன் நின்று சத்தம் போட்டு இருக்கிறார்கள்.
Shocking – actor #Siddharth forced to walk out of his #Chithha press meet in Karnataka following protests by #CauveryIssue protestors.pic.twitter.com/g5GvVpdMQn
— Siddarth Srinivas (@sidhuwrites) September 28, 2023
வைரலாகும் வீடியோ:
பின் இப்போது இந்த படம் தேவையா? தமிழ் படத்தை பற்றி இப்போது இங்கு பேசணுமா? நீங்கள் எல்லோரும் வெளியில் வந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொடுக்கக் கூடாது என்று போராடுங்க. அதை விட்டு படத்தைப் பற்றி பேசுவதா? ஆர்டர் போட நாங்க வரல. ஆனா கோரிக்கையா கேட்கிறோம் என்று கோஷமிட்டு பேசி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த அமைப்பினர் சித்தார்த்தை தொடர்ந்து வெளியேறுமாறு மிரட்டி இருக்கின்றனர். பின் சித்தார்த் அங்கிருந்து வெளியேறினார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு- கர்நாடகா பிரச்சனை:
இதற்கு காரணம், தமிழ்நாடு- கர்நாடகா இடையே பல ஆண்டுகால பிரச்சினையாக இருந்து வருவது காவேரி தண்ணீர் விவகாரம் தான். அதுவும் கடந்த சில மாதங்களாக இந்த பிரச்சனை சர்ச்சையாக இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அறிவுறுத்திய படி தமிழ்நாட்டுக்கு தேவையான நீரை கர்நாடகா திறந்து விடாததற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தது. இதனால் தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு போட்டது. இதை கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் பந்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.