காதல் பிரேக் கப் முதல் காதல் திருமணம் பண்ணது வரை – 5 முறை நீயா நானாவில் பங்கேற்று பிரபலமான நபரின் பேட்டி

0
2850
Neeya
- Advertisement -

நீயா நானா நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் தான் என்று எழுந்த சர்ச்சைக்கு நபர் ஒருவர் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது “நீயா நானா” நிகழ்ச்சி தான். நீயா நானா கோபிநாத் என்று சொன்னாலே போதும் குழந்தைகள் கூட அடையாளம் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத். இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா நானா” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார்.

-விளம்பரம்-

ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி தான் “நீயா நானா” நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள பழமை வாதங்களுக்கு எதிராக இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதிலும் அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், நட்பு, கல்வி விளையாட்டு, சமூக ஊடகம் என்ற தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

நீயா நானா நிகழ்ச்சி:

இது ஒரு பக்கம் இருக்க, நீயா நானா நிகழ்ச்சியே ஒரு ஸ்கிரிப்ட் தான் என்ற சர்ச்சை சோசியல் மீடியாவில் எழுந்திருக்கிறது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இந்த நிலையில் இது குறித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழனியப்பன் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நீயா நானா நிகழ்ச்சியில் இதுவரைக்கும் ஐந்து முறை பழனியப்பன் என்கிற நபர் கலந்து கொண்டிருக்கிறார். இவர் ஒரு youtube ஆவார்.

பழனியப்பன் கொடுத்த விளக்கம்:

இவர் தன்னுடைய youtube சேனலில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து விவரமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் என்னுடைய வாழ்க்கை மாறி இருக்கிறது. நான் நீயா நானா நிகழ்ச்சியில் முதல் முறையாக கலந்து கொண்ட போது பாய்ஸ் vs கேர்ள்ஸ் கலாய்த்தல் என்ற தலைப்பில் தான் கலந்து கொண்டேன். இது சாலிகிராமத்தில் உள்ள பிரசாந்த் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடைபெற்றது. 2012 ஆம் ஆண்டு தான் இந்த நிகழ்ச்சி நடந்தது.

-விளம்பரம்-

நீயா நானா நிகழ்ச்சி குறித்து சொன்னது:

முதல்முறையாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது நான் காலேஜ் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது இந்த நிகழ்ச்சி இரண்டு மணி நேரம் ஒளிபரப்பானது. அதனால் சூட்டிங் காலை 10 மணியிலிருந்து நான்கு மணி வரை எடுத்தார்கள். அடுத்ததாக 2013 ஆம் ஆண்டில் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மட்டும் வைத்து ஒரு ஷோ பண்ணியிருந்தார்கள். ஒரு பக்கம் காலேஜ் ஸ்டுடென்ட் இன்னொரு பக்கம் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை ஏவிஎம் ஸ்டுடியோவில் எடுத்தார்கள். அதைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக 2017 ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தேன். அப்போது நிகழ்ச்சியில் இருந்து எனக்கு போன் செய்திருந்தார்கள்.

லவ் சம்மந்தமாக பேசணும் என்று சொன்னார்கள். அப்போது எனக்கு ஏற்கனவே பிரேக் அப் ஆன நேரமாக இருந்ததால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதற்குப் பிறகு 2018 ஆம் ஆண்டில் எனக்கு திருமணம் ஆனது. பின் 2020 ஆம் ஆண்டில் மீண்டும் எனக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் ஹிந்தி கேர்ள்ஸ் மற்றும் தமிழ் பாய்ஸ் என தலைப்பு வைத்திருந்தார்கள். அதைத்தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு என்னுடைய மனைவியும் நானும் நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்டிருந்தோம். இப்படி நான் இந்த நிகழ்ச்சியில் ஐந்து முறை கலந்து கொண்டிருக்கிறேன். ஒரு முறை கூட ஸ்கிரிப்ட் எழுதி பேசியது கிடையாது.

ஸ்கிரிப்ட் குறித்த சர்ச்சை:

அந்த நேரத்தில் நமக்கு என்ன தோன்றுகிறதோ நினைக்கிறோமோ அதை தான் பேச முடியும். நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கும் போது கீழே தெரியும் நம்பருக்கு போன் செய்து நம்முடைய பயோடேட்டாவை அனுப்பி வைத்துவிட்டால் நம்முடைய வயதுக்கு தகுந்த மாதிரி நிகழ்ச்சி வரும்போது அவர்களே கூப்பிடுவார்கள். அது போல தான் ஷூட்டிங் எப்போது என்று மட்டும் சொல்வார்களே தவிர நீங்கள் என்ன பேச வேண்டும் என்பதை எல்லாம் சொல்ல மாட்டார்கள். ஆனால், நான் இத்தனை முறை கலந்து கொண்டிருப்பதை பற்றி சிலர் விமர்சித்து இருந்தார்கள். இது ஸ்கிரிப்ட் தான் என்று கேட்டிருக்கிறார்கள். அது கண்டிப்பாக இல்லை. இது ஸ்கிரிப் நிகழ்ச்சி இல்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement