‘என் முருட்டுத்தனமான ஜோக்குக்கு என்ன மன்னிச்சிடுங்க’ சாய்னாவிற்கு சித்தார்த்தின் மன்னிப்பு கடிதம்.

0
524
siddharth
- Advertisement -

பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் பதிவிற்கு ஆபாசமான முறையில் ட்வீட் செய்து சர்ச்சையில் சிக்கிய சித்தார்த் தற்போது சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சிததார்த் அடிக்கடி பல சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

சித்தார்த்தும் சர்ச்சைகளும் :

அதிலும் குறிப்பாக இவர் சமூக வலைத்தளங்களில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல கருத்துகளை கூறி பலமுறை பல சிக்கலில் சிக்கி உள்ளார். மேலும், இவர் மோடி ஆட்சியின் எதிர்பாலர் என்பதும் பலரும் அறிந்த ஒன்று தான். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேதி பஞ்சாபின் ஃபெரோஸ்பூருக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போது பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடி பாதியிலேயே திரும்பினார். இது சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

சித்தார்த்தின் ஆபாச பதிவு :

இந்த நிலையில் சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால் அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு வலுவான கண்டனம் செய்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இதை பார்த்த நடிகர் சித்தார்த் அவர்கள் ட்விட்டரில் அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் அவர், உலகின் நுட்பமான சேவல் சாம்பியன் கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர். உங்களை பார்த்து வெட்கப்படுகிறேன் ரிஹானா என்று பதிலளித்திருந்தார்.

சித்தார்த் பதிவு

சித்தார்த்தின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், சித்தார்த் அளித்த பதிவிற்கு தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு பரிந்துரை செய்து இருக்கிறார்கள். இதற்கு விளக்கமளித்த சித்தார்த் நான் எந்த தவறான நோக்கத்திலும் அந்த பதிவை பதிவிடவில்லை என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

சாய்னாவிற்கு சித்தார்த் கடிதம் :

இந்த நிலையில் சாய்னா, தன்னுடைய பதிவிற்கு சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் சித்தார்த் கடிதம் ஒன்றை எழுதி அதில், சாய்னா நேவாலை டேக் செய்து இருக்கிறார். அந்த கடிதத்தில் சித்தார்த் கூறியுள்ளதாவது ‘ நான் பதிந்த முரட்டுத்தனமான ஜோக்குக்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் உங்களிடமிருந்து பல்வேறு கருத்துகளிலும் வேறுபட்டிருக்கலாம். உங்கள் ட்வீட்டைப் படித்தபோது எனக்கு கோபமும், ஏமாற்றமும் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக எனது வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது. உண்மையில் நான் இதைவிட இரக்கம் கொண்டவனே. நான் நகைச்சுவை என்று கருதி அந்த ட்வீட்டைப் பதிவிட்டிருந்தாலுமே, அது நல்ல நகைச்சுவை அல்ல.

அது நல்ல ஜோக் இல்ல :


சரியான கருத்தைக் கொண்டு சேர்க்காத அந்த நகைச்சுவைக்காக வருந்துகிறேன்.அதேவேளையில் நான் வார்த்தை விளையாட்டாக பதிந்த அந்த நகைச்சுவை என்னைச் சாடுவோர் கூறுவதுபோல் மலினமான நோக்கம் கொண்டது அல்ல. நான் உண்மையிலேயே பெண்ணியவாதிகளின் ஆதரவாளர். ஒரு பெண் என்பதால் உங்களை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த ட்வீட்டை நான் பதிவு செய்யவில்லை. இந்தப் பிரச்சினையை நாம் முடித்துக் கொண்டு முன்னேறலாம் என நினைக்கிறேன். நீங்கள் எனது மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் எப்போதுமே எனது சாம்பியன் தான். நேர்மையுடன் சித்தார்த் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement