மிக எளிமையாக நடைபெற்ற திருமணம், ஹிப் ஹாப் ஆதியின் மனைவியை இதுவரை பார்த்துளீர்களா ?

0
2092
hiphop
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்கள் பலர் உள்ளார். ஜி வி பிரகாஷ், விஜய் ஆன்டனி போன்றவர்கள் வரிசையில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வருவார் ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் ஆதி. இவர் முதலில் 2015 ஆம் ஆண்டு தான் சினிமா துறைக்குள் படங்களில் இசை அமைக்க தொடங்கினார். இதற்கு முன் ஹிப் ஹாப் ஆதி நிறைய ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு உள்ளார். அதன் மூலமாக தான் இவருக்கு சினிமா உலகில் பாட வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-
Hip Hop Tamizha Adhi Engagement, Event Gallery, Hip Hop Tamizha Adhi  Engagement

அதுமட்டும் இல்லாமல் அனிருத் அவர்கள் தான் ஹிப் ஹாப் ஆதியை “வணக்கம் சென்னை” என்ற படத்தில் ‘சென்னை சிட்டி கேங்க் ஸ்டார் என்ற பாட்டு மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் படுத்தினார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர் .சியின் ஆம்பள படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஆதி தனி ஒருவன், இமைக்கா நொடிகள், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் பாடி உள்ளார். பின் இவர் மீசையை முறுக்கு என்ற படத்தின் மூலம் நடிகர் ஆனார்.

- Advertisement -

ஆதி நடித்த படம்:

அதனை தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இசையமைப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்களும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி இருந்த சிவகுமாரின் சபதம் படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

Hiphop Tamizha Adhi gets engaged | Entertainment News,The Indian Express

அன்பறிவு படம்:

இதனைத் தொடர்ந்து தற்போது ஆதி அவர்கள் அன்பறிவு என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் முதல் டபுள் ஆக்சன் திரைப்படமாக அன்பறிவு படம் உள்ளது. இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நெப்போலியன், விதார்த், ஆஷா சரத், சாய்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஆதிக்கு திருமணம் நடந்தா? இல்லையா?

இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. அதோடு இவர் யூடிபில் தனியாக ஒரு சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் இவரை மில்லியன் கணக்கில் மேலான ரசிகர்கள் பாலோவ் செய்து வருகிறார்கள். இது ஒரு பக்கமிருக்க, ஹிப் ஹாப் ஆதியின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை பற்றி பலருக்கும் தெரியாத விஷயத்தைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். ஹிப்ஹாப் ஆதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது பலருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? என்று ரசிகர்கள் பலருக்கும் இன்றும் சந்தேகமாகவே இருக்கிறது.

Latchaya Adhi (Hip Hop Adhi Wife) Age, Biography, Wiki, Family, Images -  Newzpanda

வைரலாகும் ஆதியின் திருமண புகைப்படம்:

ஆமாங்க, ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணம் நடந்துவிட்டது. ஆனால், இது பல பேருக்கு தெரியாது. இவர்களுடைய திருமணம் திருப்பதி கோயிலில் உறவினர்கள் மத்தியில் இரண்டு நாட்களில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. ஹிப்ஹாப் ஆதியின் மனைவி பெயர் லட்சயா. தற்போது ஆதி தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் வாழ்த்துகளைத் சொல்லியும், இவ்வளவு அழகான மனைவியா என்று கமண்ட் போட்டும், லைக்ஸ் செய்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

Advertisement