நாங்குநேரி சம்பவம் : ஜெய் பீம் படத்தை போல களத்தில் இறங்கிய ரியல் சந்துரு.

0
1655
- Advertisement -

நாங்குநேரி சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் நாங்குநேரி சம்பவம் குறித்து தான் பரபரப்பாக பேசிக்கொண்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த முனியாண்டி கூலி தொழில் செய்பவர். இவருக்கு 17 வயதில் சின்னத்துரை என்ற மகனும், 14 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள்.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சின்னத்துரை கடந்த சில வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு கேட்டு இருக்கிறார்கள். இதனை அடுத்து பள்ளிக்கு சென்ற மாணவனை ஆசிரியர்கள் விசாரித்து இருக்கிறார்கள். அப்போது சில மாணவர்கள் தன்னை தாக்கி இருப்பதாக கூறியிருக்கிறார். இதன் பின் வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவனும், அவருடைய தங்கையும் மூன்று பேர் சேர்ந்த கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து இருவரையும் அரிவாளால் சாரா மாறியாக வெட்டிவிட்டு தப்பி ஓட்டியிருக்கிறார்கள்.

- Advertisement -

நாங்குநேரி சம்பவம்:

இதை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். இது தொடர்பாக நாங்குநேரி போலீசாருக்கு மக்கள் தகவல் கொடுத்தும் போலீஸ் வரவில்லை. இதை கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தார்கள்.

இதனை அடுத்து போலீசும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்த மாணவன் மற்றும் தங்கை இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின் போலீஸ் விசாரணையில், சின்னத்துரை மாணவன் படிக்கும் பள்ளியில் சில சீனியர் மாணவர்கள் அவரை தொந்தரவு செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

போலீஸ் விசாரணை:

இது குறித்து அவர் பெற்றோரிடமும், தலைமை ஆசிரியர் இடம் கூறி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனியர்கள் அந்த மாணவனின் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. மேலும், இது குறித்து போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. தற்போது இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலருமே கண்டனங்களை தெரிவித்து வருகின்றார்கள்.

மு க ஸ்டாலின் நியமித்த குழு:

இந்நிலையில் இது தொடர்பாக மு.க ஸ்டாலின் அவர்கள் ஒரு நபர் குழு ஒன்றை அமைத்திருக்கிறார். இது சம்பவம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதன் தலைவராக நீதியரசர் சந்துருவை நியமிக்கப்பட்டு இருக்கிறார். அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஜாதி இன பிரிவினை இல்லாத ஒரு சூழ்நிலை உருவாக்கி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும்,

அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட வேண்டும் என்று இந்த ஒரு நபர் குழுவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நியமித்து இருக்கிறார்.

குழு நடத்தும் ஆய்வு:

இந்த குழு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனைகள் பத்திரிக்கை துறையில் என பல்வேறு தரப்பினர் வழங்கும் கருத்துக்களை பெற்று அதன்படியில் அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக கூறி இருக்கிறார்கள். இதனை அடுத்து சம்பவம் நடந்த நாங்குநேரி பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து அவர்களிடம் இருந்து கருத்துக்களை கேட்டு, பள்ளி, வீடு சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement