சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம் ‘ படம் குறித்து பிரபல இயக்குனர் ரஞ்சித் செய்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. சூரரை போற்று என்று வெற்றிப் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு Ott ரிலீஸ் மூலம் வந்திருக்கிறது சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படம். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து ‘கூட்டத்தில் ஒருவன்’ என்ற படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் லிஜோமோல் ஜோஸ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், இளவரசு என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார், எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
பழங்குடியினர் உரிமைகளைப் பற்றிப் பேசும் பல படங்கள் வந்திருக்கு. அப்படி வெளியான படங்கள் எல்லாமே காடுகளில் வாழும் பழங்குடியினர் பத்தி தான் இருந்தது. ஆனால், முதல் முதலாக சமவெளியில் வாழ்ந்த பழங்குடியினர் பற்றி பேசின படமாக ஜெய் பீம் படம் அமைந்திருக்கிறது.
இந்த படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். அவ்வளவு ஏன் இந்த படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கூட மிகவும் உருவகமான அறிக்கையை வெளியிட்டு படக்குழுவையும் பாராட்டினார். இந்த நிலையில் இந்த படம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்த படத்தின் ஒரு காட்சியில் பிரகாஷ் ராஜ், ஒரு வட்டிகடை சேட்டுவிடம் விசாரித்து கொண்டு இருப்பார். அப்போது அந்த சேட்டு, இந்தியில் பேசுவார். உடனே பிரகாஷ் ராஜ் அவரது கன்னத்தில் பளார் என்று அறைந்துவிடுவார். அதற்க்கு அந்த சேட்டு ‘எதுக்கு சார் என்ன அடிசீங்க’ என்று கேட்பார் அதற்கு பிரகாஷ் ராஜ் ‘தமிழ்ல பேசு’ இன்று கூறுகிறார். இந்த படம் தமிழை போல தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியானது.
தெலுங்கில் இதே காட்சியில் பிரகாஷ் ராஜ் ‘தெலுங்கில் பேசு’ என்று தான் கூறுகிறார். ஆனால், இந்தியில் மட்டும் அந்த சேட்டை அறைந்துவிட்டு ‘இப்போ உண்மைய பேசு ‘ என்று கூறுகிறார் பிரகாஷ் ராஜ். தற்போது இந்த காட்சிகள்தான் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இந்தியில் பேசினால் அடிப்பதா, இது ஒரு சர்வாதிகாரம் என்று சிலர் புலம்பி வருகின்றனர். ஆனால், இதே போல Scam 1992 என்ற படத்தில் தமிழில் பேசும் ஒரு தமிழரை இந்தியில் பேச சொல்லி அதிகாரி ஒருவர் கூறுகிறார். அந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் பலர் பகிர்ந்து ‘அப்போ இதுக்கு பேர் என்ன’ என்று ஜெய் பீம் படத்திற்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.