ஜெயலர் படத்தின் வெற்றி அடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு நடிகை ரஜினியின் மருமகள் ஜோடியாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே ஜெயிலர் படம் குறித்த செய்திகள் தான். தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் தான்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். கடைசியாக இவர் விஜய் வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது. இருந்தாலும் முயற்சியை கைவிடாமல் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை எடுத்திருக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஸ்வேதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.
ஜெயிலர் படம்:
மேலும், பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து இருந்தார்கள. இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். மேலும், இந்த படம் இதுவரை உலக அளவில் 700 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
படம் குறித்த தகவல்:
அதோடு இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கனகச்சிதமாக இயக்குனர் நெல்சன் தேர்ந்தெடுத்து இருக்கிறார். இதனால் இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மிர்ணா. இவர் மலையாள மொழியில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
மிர்ணா குறித்த தகவல்:
ஜெயிலர் படத்தின் மூலம் தான் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமாகி இருக்கிறார். இதற்காக இவர் ரசிகர்களுக்கும், ஜெயிலர் பட குழுவினருக்கும் நன்றி தெரிவித்து இருந்தார். அதோடு இவர் இதற்கு முன் தமிழ், மலையாளம், தெலுங்கு என பழமொழி படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலர் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
மிர்ணா நடிக்கும் படம்:
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை மிர்ணா புதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார். அதாவது, இவர் தெலுங்கு படம் ஒன்றில் தான் கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் நாகர்ஜுனா நடிக்கிறார். அந்த படத்தில் இரு கதாநாயகிகள். அதில் ஒருவர் இளம் நடிகையான ஆஷிகா ரங்கநாத் நடிக்க இரண்டாம் நாயகியாக மிர்னா நடிக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.