சந்திரமுகி நிஜ மாளிகை, மர்மமான பல மரணங்கள் – 100 ஆண்டுகளாக ஒளிந்திருக்கும் மர்மம் என்ன ?

0
1453
- Advertisement -

கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். தற்போது ராகவா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சந்திரமுகி 2. கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினி, ஜோதிகா, பிரபு நடிப்பில் சந்திரமுகி படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனை அடுத்து தற்போது இந்த படத்தினுடைய இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி வாசு இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் கங்கனா ரனாவத் வடிவேலு, ராதிகா, மகிமா, லட்சுமி மேனன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி இருக்கிறது. சந்திரமுகி 2 படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருகின்றது . லைகா ராகவா லாரான்ஸ் வேட்டையன் ரோலில் நடித்திருக்கிறார். படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா நடிப்பு பட்டையை கிளப்பி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் படத்திற்கு மற்றொரு பக்கபலமாக கீரவாணியின் இசை அமைந்திருக்கிறது.

- Advertisement -

சந்திரமுகி 2:

அதோடு படத்தை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் எனும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சந்திரமுகி படத்தின் மாளிகையை குறித்து பலரும் அறிந்திராத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இந்த உண்மையான சந்திரமுகி கதையை ஆலப்புழா மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து மது முட்டோம் என்பவர் எழுதியிருக்கிறார். ஆழப்புழையில் முட்டோம் என்ற இடத்தில் அலுமூட்டில் மேடா என்ற மாளிகை இருக்கிறது. இந்த அலுமூட்டில் மாளிகையில் வசித்தவர்கள் ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த நிலவுடமையாளர்கள்.

மாளிகை கதை:

இந்தக் குடும்பத்தினருக்கு திருவிதாங்கூர் மகாராஜா ‘சன்னார்’ என்ற பட்டத்தைக் கொடுத்திருந்தார். அதோடு கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் கார் வைத்திருந்த சிலரில் இந்த குடும்பமும் ஒன்று. அதில் கொச்சுகுஞ்சு சன்னார் என்பவர் குடும்ப தலைவராக இருந்தார். ஒரு நாள் கொச்சுகுஞ்சு சன்னாரும் அங்கு வேலை செய்த பணிப்பெண்ணும் கொடூரமாக கொல்லப்பட்டுஇருந்தார்கள். அதற்கு காரணம், கேரள முறைப்படி சொத்துகள் எல்லாம் பெண்வழியில் செல்ல வேண்டும். ஆக சொத்துகளை ஒருவர் தன் மருமக்களுக்கு எழுதிவைக்க வேண்டும்.

-விளம்பரம்-

போலீஸ் விசாரணை:

ஆனால், இந்த கொச்சுகுஞ்சு சன்னார் சொத்துகளை தன் குழந்தைகளுக்கு எழுதி வைத்து விட்டார். இதனால் இதில் கோபமடைந்த பெண் வழிப் பேரன் ஒருவர் அவரைக் கொன்றுவிட்டார். அந்த கொலையை பணிப்பெண் பார்த்து விட்டதால் அவளையும் கொண்று விட்டதாக கூறப்படுகிறது. பிறகு நடந்த விசாரணையில் கொச்சுகுஞ்சு சன்னாரின் அக்காள் பேரனான ஸ்ரீதரன் சன்னார் தான் அந்த கொலையை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

படம் உருவான விதம்:

அதன் பிறகு அந்த மாளிகையிலிருந்து எல்லோருமே வெளிவந்து விட்டார்கள். இந்த மூட்டோம் ஊரைச் சேர்ந்தவர் தான் மது மூட்டோம். இந்த கொலைகளை பின்னணியாக வைத்து அவர் உருவாக்கிய கதை தான் ‘மணிச்சித்திரத்தாழு’ படத்தின் கதை. அதன் ரிமேக் தான் சந்திரமுகி. அதோடு அந்த படத்தின் தெற்கு பகுதி என்று மூடப்பட்டிருக்கும் வரை அலுமூட்டில் மாளிகையில் கொலை நடந்த அரையின் மாதிரி அமைக்கப்பட்டது. ஆனால், மீதமுள்ள அனைத்துக் கதைகளும் கற்பனையானவை.

Advertisement