இரண்டாம் நாளே 6 போட்டியாளர்களை இரண்டாம் வீட்டிற்கு அனுப்பிய பிக் பாஸ் ? என்ன காரணம் தெரியுமா ?

0
930
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்று கோலாகலமாக நடைபெற்று இருந்தது கடந்த ஆறு சீசன் களை போலவே இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முதல் நாளே 18 போட்டியாளர்களின் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தனர். அதில் முதல் ஆளாக கூல் சுரேஷ் சென்று இருந்தார். அவரை தொடர்ந்து பூர்ணிமா ரவி ரவீனா தாகா பிரதீப் ஆண்டனி நிக்சன் வினுஷா தேவி, மணி சந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், அயிஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், அனன்யா ராவ், யுகேந்திரன், சரவண விக்ரம், விசித்திரா, விஜய் வர்மா என்று பலர் கலந்துகொண்டனர்.

-விளம்பரம்-

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களுக்கு பரிச்சயமான மற்றும் பரிட்சை இல்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் அந்த வகையில் இந்த சீசனலும் ரசிகர்களுக்கு பரீட்சை இல்லாத போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர் இந்த முறை கடந்த சீசன் களில் பங்கேற்ற போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

அதே போல இந்த சீசனில் வயதானவர்களை விட இளம் போட்டியாளர்கள் தான் அதிகம் கலந்து கொண்டுள்ளனர் இதனால் இந்த சீசனில் லட்சியம் காதலுக்கு பஞ்சம் இருக்காது. மேலும், முதல் நாள் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் இன்னும் 2 அல்லது 3 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக சீசனுக்கு சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில மாற்றங்களை கொண்டு வருவார்கள்.

அந்த வகையில் இந்த சீசனில் ஒரே வாசல் ஆனால் இரண்டு வீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் அந்த இரண்டாவது வீட்டில் போட்டியாளர்கள் எப்படி பிரிக்கப்படுவார்கள் அந்த இரண்டாவது வீட்டில் இருக்கும் நிறைய குறைகள் என்ன என்பது இதுவரை பெரிதாக தெரியவில்லை. இப்படி ஒரு நிலையில் இரண்டாம் நாளே இரண்டாம் வீட்டில் ஆறு போட்டியாளர்களை அனுப்பி வைத்தார் பிக் பாஸ்.

-விளம்பரம்-

நேற்று முதல் ஆளாக கூல் சுரேஷ் உள்ளே சென்ற போது பிக் பாஸ் அவரை கன்பக்ஷன் ரூமிற்கு அழைத்து நீங்கள் தான் இந்த வீட்டின் முதல் கேப்டன் என்று சர்ப்ரைஸ் கொடுத்தார். உடனே இதனால் மகிழ்ச்சி அடைந்தார் கூல் சுரேஷ். ஆனால், ஒரு ட்விஸ்ட்டை வைத்தார் பிக் பாஸ். அதவாது உங்களுக்கு அடுத்து வரும் போட்டியாளரை சமாதானம் செய்து நீங்கள் கேப்டன் பதவியை தக்க வைக்கவேண்டும்.

அப்படி இல்லை என்றால் உங்களுக்கு அடுத்து வரும் போட்டியாளர் கேப்டன் ஆகிவீடுவார். இருவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் யார் கேப்டன் என்று முடிவு எடுக்காவிட்டால் கேப்டன் பதவி அடுத்து உள்ளே வரும் போட்டியாளருக்கு போய்விடும் என்றார். இப்படி மாறி மாறி கேப்டன் பதவி கடைசியில் சென்ற விஜய் வர்மாவிற்கு கேப்டன் பதவி கிடைத்தது. இப்படி ஒரு நிலையில் கேப்டன் பதிவிக்காக சரியாக விவாதம் செய்யாத ஆகிய 6 பேரை பிக் பாஸ் இரண்டாம் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

Advertisement