பொன்னியின் செல்வனில் ஜெயராமின் முதல் டெஸ்ட் ஷூட் – ஒரிஜினல் நம்பிக்கும் இந்த கெட்டப்புக்கும் ஏதவாது சம்மந்தம் இருக்கா.

0
225
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் நம்பி ஜெயராமுக்கு போட்ட முதல் கெட்டப் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் 70 ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் கடந்த மாதம் இறுதியில் தான் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.

படத்தின் வசூல்:

மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என அனைவரும் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு படம் வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கிறது. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

ஜெயராம் புகைப்படம்:

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயராமின் முதல் கெட்டப் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த படத்தில் ஜெயராம் அவர்கள் ஆழ்வார்கடியான் நம்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் அவர் முழு மொட்டை அடித்து கொண்டு கொஞ்சம் மட்டும் குடுமி வைத்து, தொப்பை வயிறுடன் நடித்திருப்பார். இவருடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டிருந்தது.

ஜெயராம் திரைப்பயணம்:

இந்நிலையில் இந்த படத்திற்காக இவர் முதன் முதலாக போட்ட கெட்டப் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இதுதான் நம்பியின் கெட்டப்பா! நம்பவே முடியவில்லை என்று கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள். பொன்னியின் செல்வன் படம் வெளியானதில் இருந்தே இயக்குனர் மணிரத்னம் சோழர்களின் உண்மையான அடையாளத்தை மறைத்து இருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்படி இருக்க ஒருவேளை ஆழ்வார்கடிய நம்பி இந்த லுக் வந்து இருந்தால் இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும்.

Advertisement