இனி சண்டை வேண்டாம் – இதுவரை அதிக வசூலை குவித்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட். லிஸ்டில் இல்லாத அஜித்.

0
1187
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் இதுவரை அதிக வசூலை குவித்த படங்களின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகர்களின் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு மத்தியில் சண்டை, சச்சரவு வருவது வழக்கமான ஒன்று தான். இது எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தொடங்கி தற்போது வரை நடந்து கொண்டிருக்கின்றது. அதிலும் எந்த நடிகர்களின் படங்கள் அதிக நாள் ஓடியிருக்கின்றது என்ற சர்ச்சை தான் அதிகமாக நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக வசூலை குவித்த படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-
bigil

பிகில்:

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். விஜய் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகி இருந்த படம் தான் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி இருந்தார். அட்லீ -விஜய் கூட்டணியில் வெளியான கடைசி படம் இது தான். இதற்கு முன்பு அட்லீ- விஜய் கூட்டணியில் தெறி, மெர்சல் போன்ற படங்கள் வெளியாகிறது. இந்த படங்களும் நல்ல வசூலை பெற்றிருந்தது. இருந்தாலும், பிகில் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியிருந்தார்கள். இந்த படத்தில் நயன்தாரா, விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் இதுவரை 300 கோடி ரூபாய் வசூல் குவித்து இருந்தது. இந்த படம் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

- Advertisement -

வாரிசு:

தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஒட்டி வெளியான படம் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிருந்தார். இந்த படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், ஸ்ரீகாந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். குடும்ப கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் 310 கோடி ரூபாயை வசூல் செய்து இருக்கிறது. குடும்ப ரசிகர்களை இந்த படம் கவர்ந்தது என்றே சொல்லலாம். இந்த படம் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

விக்ரம்:

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் விக்ரம். கடந்த ஆண்டு வெளியாகிய இந்த படம் உலகம் முழுவதும் பல வசூல் சாதனை செய்திருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். கமல் நடித்த படங்களிலேயே அதிக வசூலை குவித்தது இந்த படம் தான். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை என அனைவருமே இந்த படத்தை பார்த்து ரசித்து இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் நீண்ட நாட்கள் திரையரங்கில் இந்த படம் ஓடி சாதனை படைத்திருந்தது. இந்த படம் 500 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

-விளம்பரம்-

பொன்னியின் செல்வன்:

இயக்குனர் மணிரத்தினத்தின் நீண்ட நாள் கனவாக இருந்த படம் பொன்னியின் செல்வன். பல ஆண்டுகளாக இந்த படத்தை இயக்க பல பேர் முயற்சித்து இயக்குனர் மணிரத்தினம் சாதித்து காட்டியிருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. தற்போது இரண்டாம் பாகத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

2.0rajini

2.0:

கோலிவுட்ல என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படம் தான் 2.0. இந்த படத்தை சங்கர் இயக்கியிருந்தார். பெரும் பொருட்செலவில் இந்த படம் உருவானது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. மேலும், இந்த படம் 625 கோடி முதல் 800 கோடி வரை வசூல் குவித்ததாக கூறப்படுகிறது.

Advertisement