தேசிய கீதத்தை இந்திய ஒன்றிய நாட்டுப்பண் என்று சொன்னது ஏன் ? Article 300இ உதாரணம் காட்டி ஜேம்ஸ் வசந்தன் பதிலடி.

0
477
james
- Advertisement -

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தேசிய கீதத்திற்கு பதிலாக இந்திய ஒன்றிய நாட்டுப்பண் என்று கூறி இருந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்த நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன். 90ஸ் கிட்ஸ்களுக்கு பரிட்சியமான பல தொகுப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். தெளிவான தமிழ் பேசும் தமிழ் தொகுப்பாளர்களில் இவருக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. இவர் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.மேலும், இவர் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணையம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் நிறைய ஆல்பம் பாடல்களைக் கூட இசையமைத்து உள்ளார். அதே போல இவை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். சமீப காலமாக இவரை எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலோ மேடை நிகழ்ச்சிகளிலோ காண முடிவதில்லை. இப்படி ஒரு நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜேம்ஸ் வசந்தன் செஸ் ஒளிமிபியட் நிறைவு விழாவில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : தன் பிள்ளைகளை போட்டோ எடுக்க அனுமதிக்காத சூர்யா, போட்டோகிரப்பர்ஸ் வைத்த வேண்டுகோளை ஏற்று செய்த செயல்.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா :

இந்த விழா நேற்று படு கோலாகலமாக நிறைவடைந்தது.இந்த விழாவில் தேசிய கீதம் போடப்படும் முன்னர் ஜேம்ஸ் வசந்தன் ‘இப்போது இந்திய ஒன்றிய நாட்டுப்பண் பாடப்படும், அவையோர் அனைவரும் எழுந்து நிற்க வேண்டுகிறோம்’ என்று கூறி இருந்தார். இதனை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் பலரும் ஜேம்ஸ் வசந்தனை திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், ஜேம்ஸ் வசந்தன் தி மு கவை சேர்த்தவர் என்பதால் தான் அவர் ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார் என்றும் விமர்சனம் எழுந்தது.

-விளம்பரம்-

இந்திய ஒன்றிய நாட்டுப்பண் :

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து தன் முகநூல் பக்கத்தில் விளக்கமளித்துள்ள ஜேம்ஸ் வசந்தன் ‘ஏன் இந்திய ஒன்றியம் என்று சொன்னார் என்று ஒரு கூட்டம் பொறுமுகிறது. என்னை யாரும் சொல்லச் சொல்லவில்லை. அது என் தேர்வுதான். இந்த ஊடகப் பயணத்தில் எனக்கு நல்ல மொழியை, தகுந்த சொற்களை, சரியான பயன்பாட்டைப் பலரும் சொல்லிக்கொடுத்துதான் என்னை வளர்த்திருக்கிறார்கள். அறிஞர் மட்டுமன்றி சாமானியரும் எனக்குப் பல விதங்களில் கற்றுத் தந்திருக்கின்றனர். வெறுப்போடு படித்த மொழியை இன்று நேசிக்கத் தொடங்கியதும் இவர்களால்தான்.

பல சொற்களை நான் என் பயன்பாட்டில் மாற்றி வந்திருக்கிறேன் :

அந்த அடிப்படையில் இப்படிப் பல சொற்களை நான் என் பயன்பாட்டில் மாற்றி வந்திருக்கிறேன்/வருகிறேன். நேற்று நான் அப்படி ‘இந்திய ஒன்றியம்’ என்று சொன்னது அந்த அட்டையில் எழுதி வைக்கப்படவில்லை, திட்டமிடப்படவில்லை. ஒலிவாங்கியின் முன் நின்றபோது என் மனதில் திருத்தி அமைக்கப்பட்ட அந்தச் சொல் தானாக வந்து விழுந்தது. ஏனெனில், இதைக்குறித்து நான் ஏற்கனவே சில கட்டுரைகளையும், சட்ட விளக்கங்களையும் வாசித்திருந்தேன். சில அரசியல் விமர்சகர்களிடமும் கேட்டுத் தெரிந்து வைத்திருந்தேன்.

Article 300 உதாரணம் :

அதன் சாராம்சம் – Union of India or Indian Union may refer to: The country of India. The Government of India, whose legal name is ‘Union of India’ as per Article 300 of the Indian constitution. மத்திய அமைச்சர்களை இங்லிஷில் Union Minister என்றும் அந்த அமைச்சரவையை Union Council of Ministers என்றும், அவர்கள் ஆண்டுதோறும் வழங்குகிற வரவு-செலவு திட்டத்தை Union Budget என்றுதான் எல்லா இங்லிஷ் பத்திரிகைகளும் காலங்காலமாக எழுதிவருகின்றன.இந்த சிறு ஆராய்ச்சியின் காரணமாக Indian Union என்பது என் மனதில் சமீபகாலத்தில் பதிந்துவிட்டது. இது நாம் தீர்மானிக்கிற விஷயமல்ல. இதுதான் நாம் குடிமக்களாகப் பிறந்து வாழ்கிற இடத்தின் அமைப்பு. அதை இருக்கும் வண்ணம்தானே சொல்லமுடியும். இதை தி.மு.க. என்கிற கட்சி சொல்வதால் எதிர்ப்பதோ, வரவேற்பதோ படித்தவர்க்குப் பொருந்தாது. இது சரியென்பது எனக்குத் தெரியும். அதனால் சரியானதை நான் செய்கிறேன்.

Advertisement