‘படத்தை முழுமையாக ரசிக்கமுடியாமல் செய்துவிட்டது’ – ஜேம்ஸ் வசந்தனின் துணிவு விமர்சனம்.

0
503
james
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரித்து, வலிமை, சதுரங்காக வேட்டை இயக்குனர் எச் வினோத் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, யோகி பாபு, பிக் பாஸ் பாவனி, அமீர் என பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படம் படம் `தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான விஜய் நடித்த “வாரிசு” பாடத்துடன் ஒன்றாக வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படம் வாங்கிக்கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும். அஜித் முன்பு நடித்த படங்களை போல இப்படத்தில் ஒரு குழுவை வைத்து அஜித் கொள்ளையடிக்கிறார? என்றால் அங்கேதான் ட்விஸ்ட் இருக்கிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் Your Bank என்ற வங்கியை கொள்ளையர்கள் தங்கள் வசப்படுத்துகின்றனர். வங்கியையும் அங்குள்ள மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை சமுத்திரக்கனி ஏற்கிறார்.

- Advertisement -

அவர்களுக்கு சவால் விடும் வேலையே அஜித் செய்து வருகிறார். வங்கியில் நடக்கும் மோசடிகளை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் மாசான வில்லனாக அஜித் நடித்திருக்கிறார். சர்வதேச அளவில் ஏஜெண்டாக செயல்படும் ஒரு கும்பல் ஏன்? இந்தியாவில் உள்ள ஒரு வங்கியை மட்டும் குறிவைத்து கொள்ளையடிக்கின்றனர் என்பதும், அவர்கள் எதற்காக கொள்ளையடிக்கின்றனர்? அவர்களை சுற்றி நடக்கும் விஷயங்கள் என்ன? என்பதை மையத்தமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

thunivu

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன் ‘

-விளம்பரம்-

நேற்றிரவு ‘துணிவு’ பார்த்தேன்.

பெரிய நட்சத்திரங்களின் படங்களை வந்த சில நாட்களிலேயே பார்ப்பது வேறுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும் – அவர்களது ரசிகர்களின் அதீத கூச்சல்களோடும், விசில்களோடும். நேற்றும் அப்படித்தான்!

படம் தொடங்கி ரொம்ப நேரம் ஒரு ஆறுதலான மாறுதல்.. நாயகன் இலக்கணப் புருஷன் இல்லை என்று அறியும்போது. திருடுகிறான்.. சுடுகிறான்.. ஈவு இரக்கமின்றி அடிக்கிறான். இறுதியில் அதுவும் பொது நலத்திற்காகத்தான் என்று தெரியும்போது நல்லவனோ என்று தோன்றுகிறது.

ஆனால் அவன் நல்லவன் என்று எங்கேயும் சொல்லிக்கொள்ளவில்லை அவன் கேள்விக்குறியானவன் என்பது மட்டும் அப்படியே நிற்கிறது.

James

ஏனென்றால், இந்திய தேசத்தின் கமான்டோ (commando) வீரர்களை கொஞ்சம் கூட சிந்திக்காமல் சிட்டுக்குருவிகளைக் கூட்டமாய் சுட்டுத்தள்ளுவது போல தொடக்கத்திலேயே சுட்டுக் கொன்று குவிக்கிறான் அந்த நாயகன்.

அஜீத்தின் தோற்றம், மிடுக்கு, ஸ்டைல் எல்லாம் Top Class!

பட்டிமன்ற மோகனசுந்தரம் வரும் காட்சிகள் மனம்விட்டு சிரிக்கும்படி இருக்கின்றன.

நாங்கள் பார்த்த திரையரங்கில் ஒலி மிகவும் குறைவாய் வைக்கப்பட்டிருந்தது படத்தை முழுமையாக ரசிக்கமுடியாமல் செய்துவிட்டது. இருந்தாலும் அனிருந்தை miss பண்ணினோம்

Advertisement