ஐஸ்வர்யாவை வீட்டுக்குள் வந்து வெறுப்பேத்திய ஜனனி தங்கச்சி.! கடுப்பான ஐஸ்வர்யா.!

0
363
janani

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘ஃப்ரீஸ் டாஸ்க் ‘ நடைபெற இருக்கிறது என்று இன்று வெளியான ப்ரோமோ வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. இன்று ஒலிபரப்பான ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர் என்பது தெரியவந்தது.

krithika

அதே போல சமீபத்தில் வெளியான மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் ஜனனி ஐயரின் தாய் மீனாட்சி மற்றும் தங்கை கிருத்திகா ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர் என்பது தெரிகிறது. மேலும், அந்த ப்ரோமோ வீடியோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள ஜனனனியின் தங்கை கீர்த்திகா, ஐஸ்வர்யாவிடம் வேண்டுமென்றே வம்பிழுத்து அவரை வெறுப்பேற்ற முயன்றது போல தெரிகிறது.

ஏற்கனவே பேட்டி ஒன்றில் ஜனனி ஐயரின் தங்கை கிரித்திகாவிடம் ஐஸ்வர்யா குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது, அப்போது பிக் பாஸ் வீட்டிலேயே ஐஸ்வர்யா தான் அடங்கா பிடாரி என்றும் தெரிவித்தார். இதை தொடர்ந்து “சர்வாதிகார” டாஸ்க் பற்றி கேட்டபோது அவங்க என்ன “ராணி மஹா ராணியா” ஐஸ்வர்யாவுக்கு ஏதோ கொம்பு முளைத்தது போல நடந்து கொண்டார் என்று கிருத்திகா தெரிவித்திருந்தார்.

Aishwarya

சர்வாதிகார டாஸ்கிற்கு பின்னர் ஐஸ்வர்யாவின் மீது ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு எரிச்சல் ஏற்பட்டதோ அதே அளவிற்கு ஜனனியின் தங்கைக்கு எரிச்சல் இருந்துள்ளது.அவரால் பேட்டியின் வாயிலாக மாட்டும் தான் கோபத்தை வெளிப்படுத்த முடிந்தது.இந்த கோபத்தை தீர்த்துக்கொள்ளும் வகையில் க்ரித்திகாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, அது என்னவென்றால்..?

ஐஸ்வர்யாவுக்கு அவரது அம்மா ஐஸ்வர்யாவுக்கு மிகவும் பிடித்த கரடி பொம்மை ஒன்றை அனுப்பிவைத்தார். இதை பார்த்த ஐஸ்வர்யா மிகவும் சந்தோஷப்பட்டார்.அவருக்கு கரடி பொம்மை என்றால் அதிகம் பிடிக்கும் போல இருந்தது, ஏன் என்றால் அதை பார்த்தவுடன் அவரது முகத்தில் அப்பட்டி ஒரு சந்தோசம்.இதை தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் கிருத்திகா, ஐஸ்வர்யா அறைக்கு சென்று ஐஸ்வர்யா அம்மா ஆசையாக அனுப்பிய பொம்மையை எடுத்துக்கொள்கிறார், இதன் மூலம் அவர் ஐஸ்வர்யாவின் அம்மா ஆசையாக கொடுத்த பொம்மையை எடுத்துக்கொண்டு அவரை வெறுப்பேற்றினார் என்பது தெரிகிறது, இந்த சம்பவத்தால் ஐஸ்வர்யா எதுவும் செய்ய முடியாமல், அவரை பார்த்து முறைக்க மட்டும் செய்கிறார்.

Aishwarya

ஐஸ்வர்யாவுக்கு கரடி பொம்மை என்றால் அதிகம் பிடிக்கும் என்பதால்..ஜனனி தங்கை கிருத்திகா எடுத்த சென்றதை கவனித்த ஐஸ்வர்யாவின் தாய், இன்று பிக் பாஸ் வீட்டுக்கு வரும் போது இன்னொரு பொம்மையை வாங்கிவருகிறார்.