பாலிவுட்டில் சம்பவம் செய்த முதல் தமிழன் – அட்லீயின் ஜவான் படைத்த அசைக்க முடியாத சாதனை

0
403
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார் அதன் பின் தான் இவர் இயக்குனர் ஆனார். மேலும், இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஜவான் படம்:

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது. ஆனால், சிலர் நெகடிவான விமர்சனங்களை கொடுத்து இருந்தார்கள். ஆனால், இந்திய அளவில் இந்த படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலில் நெருங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பட குழுவினர் ஜவான் படத்தின் வெற்றி விழாவை சமீபத்தில் கொண்டாடியிருந்தார்கள்.

படம் குறித்த தகவல்:

மேலும், நீண்ட நாட்களுக்கு பின்னர் அதிரடியான படம் இந்தியில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் ஜவான் படத்தை கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் இந்த மாதிரியான படங்கள் வெளியாவது ரொம்ப கஷ்டம் என்றெல்லாம் கூறப்படுகிறது. அதோடு 2023 ஆம் ஆண்டிலேயே இந்திய திரையுலகில் உலக அளவில் பாக்ஸ் ஆபீசில் 1100 கோடிக்கு மேல் வசூல் செய்த ஒரே படம் ஜவான். இந்த படம் நவம்பர் மாதம் நெட்ஃபிளிக்ஸ் ஓ டி டி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து netflix தளம் அறிக்கை வெளியிட்டது.

-விளம்பரம்-

நெட்ஃபிளிக்ஸ் பதிவு:

அதில் அவர், ஜவான் படம் இரண்டு வாரங்களில் உலக அளவில் டாப் 10 படங்கள் பட்டியலில் இருக்கிறது. இரண்டு வாரங்களில் ஜவான் படம் 3,700,000 பார்வைகளை கடந்து இருக்கிறது மற்றும் 10,600,000 மணிநேரம் பார்க்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள ஒரே ஒரு இந்தியத் திரைப்படம் இருகபற்று. இது 1,200,000 பார்வைகளையும் 3,000,000 மணிநேரம் பார்க்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக ஷாருக்கான் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நெட்ஃபிளிக்ஸில் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட படம் ஜவான் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஷாருக்கான் அறிக்கை:

படத்திற்கு தங்களின் அசைக்க முடியாத அன்பையும், ஆதரவையும் கொடுத்ததற்காக எங்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வழியாகும். நெட்ஃபிக்ஸ் பார்வையாளர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு இந்திய சினிமாவின் புத்திசாலித்தனத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஜவான் ஒரு படம் மட்டுமல்ல; இது கதைசொல்லல், ஆர்வம் மற்றும் எங்கள் சினிமாவின் துடிப்பான ஆவி ஆகியவற்றின் கொண்டாட்டமாகும், மேலும் நெட்ஃபிக்ஸ்ஸில் அதன் வெற்றியைப் பற்றி நான் பெருமைப்பட முடியாது என்று கூறி இருக்கிறார்.

Advertisement