அதுக்கு அவர் தான் காரணம் – ‘இடியட்’ படத்தில் விக்ரம் படத்தை கேலி செய்ததாக எழுந்த சர்ச்சைக்கு நிக்கி கல்ராணி விளக்கம்.

0
532
nikki
- Advertisement -

இடியட் படத்தில் கமலின் விக்ரம் படத்தை கிண்டல் செய்த காட்சி குறித்து எழுந்த சர்ச்சைக்கு நிக்கி கல்ராணி அளித்து உள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் நிக்கி கல்ராணி. இவர் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் ஒரு மாடலும் ஆவார். பின் இவர் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த டார்லிங் என்ற படத்தின் மூலம் தான் நிக்கி கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
nikki-galrani

ஆனால், டார்லிங் படத்திற்கு முன்பாகவே நிக்கி கல்ராணி அவர்கள் கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பிற மொழியில் சில படங்களில் நடித்து உள்ளார். இப்படி இவர் தமிழ் மொழியில் பிசியாக மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் வெளிவந்த படம் ராஜவம்சம். இந்த படத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, விஜயகுமார், யோகி பாபு, தம்பி ராமையா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளார்கள்.

- Advertisement -

நிக்கி கல்ராணியின் திரைப்பயணம்:

இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். கிராமத்து பின்னணியை மையமாக கொண்ட படமாக ராஜவம்சம் அமைந்திருக்கிறது. மேலும், நடிகர் சசிகுமார் உடைய ராஜவம்சம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு குடும்பத்தோடு சென்று பார்க்கும் படமாக ராஜவம்சம் இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது நிக்கி கல்ராணி அவர்கள் மிர்ச்சி சிவாவுடன் இடியட் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் இடியட்.

idiot

இடியட் படம் பற்றிய தகவல்:

தில்லுக்கு துட்டு, தில்லுக்குதுட்டு 2 போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் தான் இடியட் படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த படம் ஹாரர் காமெடி பாணியில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக மிர்ச்சி சிவா நடித்து இருக்கிறார். மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இந்த படத்தை சீன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இவர்களுடன் படத்தில் ஆனந்தராஜ், ஊர்வசி, மயில்சாமி, ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இடியட் பட அனுபவம் குறித்து நிக்கி சொன்னது:

இந்த நிலையில் நடிகை நிக்கி கல்ராணி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் இடியட் படம் குறித்து கூறியிருப்பது, டார்லிங் படத்திற்கு பிறகு மீண்டும் அதே போல பேய் படத்தில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இடியட் படம் ஒரு ஜாலியான படம். இரண்டு மணி நேரம் நல்ல ஜாலியாக சிரித்து கொண்டே படம் பார்த்த அனுபவத்தில்வெளியே வரலாம். அந்த அளவிற்கு செம்ம என்டர்டைன்மெண்ட் பரம். ஒரு நடிகராக காமெடி பண்ணுவது என்பது ரொம்ப கடினமான விஷயம். அதேபோல் நம்மளே நம் மீது காமெடி பண்ணி மற்றவர்களை சிரிக்க வைப்பது என்பது பெரிய விஷயம். இதை சிவா சிறப்பாக செய்து இருக்கிறார். அவருடன் நடித்தது நல்ல அனுபவம்.

விக்ரம் பட சர்ச்சை குறித்து நிக்கி கூறியது:

அதேபோல் ட்ரைலரில் கமல் சாரின் விக்ரம் படத்தை கிண்டல் செய்வது போல வரும் காட்சிகளை இயக்குனர் ராம்பாலா சார் தான் வைத்தார். எனக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இயக்குனர் சொன்னதை நான் நடித்தேன். அவ்வளவு தான். நடிப்பதற்கு முன்பே, சார் நானும் கமல் சார் ஃபேன் தான். ஏதாவது பிரச்சனை ஆயிடுச்சா? நான் என்ன பண்றது என்று கேட்டேன். அவர் தான் அது எல்லாம் நான் பார்த்துக்குறேன் நீங்க நடிங்க என்றார். அதன் பிறகு தான் நான் நடித்தேன். அந்த காட்சிகள் வந்ததற்கு காரணம் இயக்குனர் தான் நான் இல்லை என்று கூறினார்.

Advertisement