எங்களை மாதிரி ஆள் கிட்ட Selfie எடுக்க மாடீங்களா? – ஆதங்கப்பட்டு ரசிகருக்கு ஜெயம் ரவி கொடுத்த பதில்.

0
193
- Advertisement -

தன்னை விமர்சித்த ரசிகருக்கு ஜெயம் ரவி கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. இவர் 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும், சகோதரன் இயக்கியத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், சமீப காலமாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இறுதியாக இவரது நடிப்பில் வெளியான அகிலன் மற்றும் இறைவன் ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை தழுவியது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தற்போது இவர் நடித்துள்ள ‘சைரன்’ படம் சில தினங்களுக்கு முன் வெளியாகியிருக்கிறது. அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவரை தொடர்ந்து படத்தில் அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, சமுத்திரக்கனி, வீரம் யுவானா,அழகம் பெருமாள்,அஜய் என்று பலர் நடித்துள்ளனர்.
படத்தில் தான் செய்யாத தவறுக்கு 14 ஆண்டுகள் சிறையில் இருக்கும் நாயகன் 14 நாட்கள் பரோலில் வெளியில் வந்து தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமானவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதே இந்த படத்தின் ஒன் லைன். படத்தின் நாயகன் ஜெயம் ரவி (திலகன்) ஒரு ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து வருகிறார்.

- Advertisement -

சைரன் படம்:

தனது மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து வரும் ஜெயம் ரவி தான் செய்யாத தவறுக்காக 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கிறார். பின்னர் 14 நாட்கள் பரோலில் வெளியில் வரும் ஜெயம் ரவியால் அவரது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், பள்ளி செல்லும் வயதில் இருக்கும் அவர் மகள் மட்டும் அவரது வருகையை எண்ணி கோபப்படுகிறார். அதற்கு காரணம் தன்னுடைய தந்தை சிறைக்கு சென்றதால் பள்ளியில் அவர் கேலிகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டது தான்.

படத்தின் கதை:

சிறையில் இருந்து பரோலில் வந்த ஜெயம் ரவி தன்னுடைய குடும்பத்தைக் காணத்தான் வெளியில் வந்திருக்கிறார் என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் தன்னை இந்த நிலைக்கு ஆளாகிய அவர்களை பழிவாங்கவே ஜெயம் ரவி வெளியில் வருகிறார். இறுதியில் ஜெயம் ரவியின் இந்த நிலைக்கு யார் காரணம்? கீர்த்தி சுரேஷ்ஷை மீறி தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய நபர்களை ஜெயம் ரவி பழி வாங்கினாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக் கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

ரசிகர் பதிவு:

இந்த நிலையில் சைரன் படம் திரைக்கு வந்த முதல் நாளில் ஜெயம் ரவி அவர்கள் மதுரைக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்திருக்கிறார். அப்போது மதுரை திரையரங்கம் முன்பு ரசிகர்கள் ஒன்று திரண்டு ஜெயம் ரவியுடன் செல்பி எடுத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் ஜெயம் ரவியுடன் செல்பி எடுக்க முடியாமல் போனதால் ரசிகர் ஒருவர் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், உங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். ஆனால், முடியவில்லை.

ஜெயம் ரவி பதில்:

உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுடன் மட்டும் செல்பி எடுத்து விட்டு என்னை போன்றவர்களை அனுப்பி விட்டீர்கள். இது எனக்கு மோசமான நாள். உங்களிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை என்று வருத்தமாக பதிவிட்டிருந்தார். இதை பார்த்த ஜெயம் ரவி, மன்னித்து விடுங்கள் பிரதர். அன்றைய தினம் கிட்டதட்ட 300 பேருடன் செல்பி எடுத்துக் கொண்டேன். உங்களுடன் எடுப்பது எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை. சென்னைக்கு வாருங்கள் கண்டிப்பாக செல்பி எடுத்துக் கொள்வோம். வெறுப்பு வேண்டாம், அன்பை பரப்புங்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement