‘பிக் பாஸ்’ அசீம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்: யூடியூப்பர் பரபரப்பு குற்றச்சாட்டு

0
393
azeem
- Advertisement -

பிக் பாஸ் அசீம் மீது யூடியூப்பர் காவல் நிலையத்தில் அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் அசீம். இவர் வி.ஜே.வாக தான் சின்னத்திரை உலகில் அறிமுகமானார். அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” என்ற சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

-விளம்பரம்-

பின் இவர் ஆண்டாள் அழகர், கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். கடைசியாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பூவே உனக்காக என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து இருந்தார். அதற்குப் பிறகு அசீம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் வெற்றியாளர் அசிம்:

மேலும், இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து இறுதிவரை அசீம் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுதியிருந்தது. அது மட்டும் இல்லாமல் கமல் பலமுறை அசீமிற்கு வார்னிங் கொடுத்திருந்தார். இதனால் இவர் இறுதி வரை வருவாரா? என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வியாகவே இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டார். இது குறித்து பலருமே விமர்சித்து இருந்தார்கள்.

யூடியூப்பர் கொடுத்த புகார்:

மேலும், அசீமுக்கு இந்த பட்டம் கிடைத்திருப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக பலரும் குற்றம் சாட்டியிருந்தார்கள். இந்த நிலையில் அசீமுக்கு கொடுக்கப்பட்ட பிக் பாஸ் பட்டம் முறைகேடு தான் என்று யூடியூப்பர் ஜோ மைக்கேல் என்பவர் 24 கேள்விகள் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு அனுப்பி இருக்கிறார். இது தொடர்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். இதனை அடுத்து அசீமுடைய ஆதரவாளர்கள் தனக்கு மிரட்டல் விடுப்பது மட்டுமில்லாமல் அவதூறாக தகவல்களை பரப்புகிறார்கள் என்று யூடியூப்பர் மைக்கேல் சென்னை காவல் ஆணையரத்தில் புகார் அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

யூடியூப்பர் அளித்த பேட்டி:

பின்பு இவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியது, வழக்கமாக அனைத்து பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் போன் கால் மூலமாக போட்டியாளர்களுக்கு வாக்கு செலுத்தி இருந்தார்கள். ஆனால், பிக் பாஸ் சீசன் 6ல் மட்டும் ஹாட்ஸ்டார் மூலமாக மட்டுமே வாக்கு செலுத்த வேண்டும் என்ற முறை கொண்டு வந்து இருந்தார்கள். இது சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது, கமலஹாசன் பலமுறை அசீமை எச்சரித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் அவர் எப்படி முதலாவதாக பட்டம் பெற்றார். இதில் முறைகேடு நடந்திருக்கிறது. இது தொடர்பாக இந்திய ஒளிபரப்பு அறக்கட்டையில் உள்ள தகவல் அறியும் சட்டத்தில் 24 கேள்விகளுக்கு தகவல் கேட்டு மனு அனுப்பினேன்.

அசீம் மீது குற்றச்சாட்டு:

அதில் அசீம் எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளார் ? ரெட் கார்ட் கொடுத்தும் எலிமினேட் செய்யாமல் அசீம் போட்டியில் தொடர்ந்தது எப்படி? என பல்வேறு கேள்விகள் கேட்டு அனுப்பி இருந்தேன். பின் நான் அனுப்பிய மனுவை வாபஸ் வாங்க வேண்டும் என்று அசீம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் செல்போன் மூலம் எனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர். அது மட்டும் இல்லாமல் என்னைப் பற்றி சோசியல் மீடியாவிலும் அவதூறாக பரப்பி வருகிறார்கள்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெற்ற பணத்தை கொரோனாவால் உயிர் இழந்த குடும்பத்திற்கு உதவி செய்வதாக அசீம் தெரிவித்தார். ஆனால், அவர் இதுவரை எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. அதோடு எனக்கு அசீம் மீது எந்தவிதமான விரோதமும் கிடையாது. பொது நலன் கருதி மட்டுமே இது போன்ற புகாரை நான் பதிவு செய்துள்ளேன். இதுபோலத்தான் பப்ஜி மதன், லோன் ஆப் மற்றும் மீரா மிதுன் ஆகியோர் மீதும் வழக்கு தொடர்ந்தேன். என்னை மிரட்டிய அசீம் அவருடைய ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement