தற்போது வஞ்சகர் உலகம் என்ற படத்தில் செம்ம கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் உதவியாளர் மனோஜ் பீதா இயக்குகிறார்.மேலும், இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விநாயக் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளார்.
இது ஒரு கேங்க்ஸ்டர் அம்சம் கொண்ட கதை என இயக்குனர் கூறியுள்ளார். இதுகுறித்து இயக்குனர் மனோஜ் பீதா கூறியதாவது , குறிப்பாக குரு சோமசுந்தரம் ஒரு கேங்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ளார்.
ஒவ்வொரு காட்சியையும் அவர் கையாண்டு அசத்திய விதம் நான் அவரிடம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பிரமாதமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட 6 நிமிட கட்சியை ஒரே டேக்கில் ஓகே செய்து எல்லோரையும் மிரளவைத்தார். அவரது அபார நடிப்பாற்றலால் கதையில் நாங்கள் சில மற்றங்களை செய்ய வேண்டியிருந்தது எனக் கூறினார் இயக்குனர். இந்த படத்திற்கு சி.எம் சாம் இசையமைக்கிறார்.




