2017-ல் அதிகமாக சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றப்பட்ட பெண் யார் தெரியுமா ?

0
2255
Julie

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ஒரே நாளில் ஓகோ என பிரபலம் அடைந்தவர் ஜுலி. சொல்லப்போனால் அந்த பிரபலம் கிடைக்க பாடுப்பட்டவர்கள் மீம் கிறியேட்டர்கள் தான். அப்படி வீரதமிழச்சியாக புகழ் பெற்ற ஜூலி இந்த வருடம் விஜய் டிவியின் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.
Julie bigg boss
இது தான் வாய்ப்பு என கூப்பிட்டவுடன் ஓடிச்சென்று கலந்துகொண்டார் ஜூலி. பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் வரை ஜூலியை மக்கள் தங்கள் பிரதிநிதியாகவே பார்த்தனர். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றபின் கதை அப்படியே தலைகீழாக மாறியபது.

இவரது புறம் பேசம் குணமும், மாற்றி மாற்றி பொய் பேசும் வக்கிர புத்தியும் கிடைத்த பிரபலத்தை ஒரு சில நாளில் சுக்கு நூறாக நொறுக்கியது. பிக் பாஸ் வீட்டில் அனைவரும் சினிமா பிரபலங்களாக இருக்க ஜூலி மட்டுமே அப்போது சாதாரண மக்களில் ஒருவராக இருந்தார். இதனால் அவரை தங்களில் ஒருவராக பார்த்தனர் மக்கள். அந்த மக்களின் வாயாலேயே தன்னை கழுவி கழுவி ஊற்றும் வகையில் செய்துவிட்டார் ஜூலி.

- Advertisement -

தற்போது டீவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குதல், படங்களில் நடித்தல் என பிசியாக இருந்தாலும் மக்களிடம் அவருக்கானஅர்ச்சனை மட்டும் இன்னும் தொடர்கிறது. இதனால் 2017ல் அதிகம் கழுவி ஊற்றப்பட்ட பெண் என்ற பட்டம் ஜூலிக்கு மட்டுமே சொந்தம் என்பதில் சந்தேகமில்லை

Advertisement