பெண் anchor செய்த செயலால் செம கடுப்பான ஜூனியர் NTR – வைரல் வீடியோ

0
266
- Advertisement -

தெலுங்கு நடிகரான ஜூனியர் என் டி ஆர் பிரபல ஜாம்பவான் நடிகரான என் டி ஆரின் மகன் என்பது பலரும் அறிந்த விடயம். மேலும், ஜூனியர் என் டி ஆர் தெலுங்கு சினிமாவில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ‘நின்னு ச்சூட்லாணி ‘ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. ஆனால், அதன் பின்னர் வெளியான இவரது படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

-விளம்பரம்-

RRR :

தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ஜூனியர் என் டி ஆர். மேலும் சமீபத்தில் இவர் நடித்திருந்த RRR படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒன்று பாகுபலி. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த படம் RRR. இந்த படம் ஐந்து ஆண்டுகள் கழித்து திரைக்கு வெளியாகி இருக்கிறது. RRR என்பது இரத்தம் ரணம் ரெளத்திரம் என்று பொருள்.

- Advertisement -

இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் , அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை டிவிவி நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது.

அமிகோஸ் படம் :

இந்நிலையில் இவர் டோலிவுட்டின் முன்னனி நடிகர் கல்யாண் ராம் நந்தமுரியின் “அமிகோஸ்” திரைப்படம் பிப்ரவரி 10 ஆம் தேதி பெரிய திரைக்கு வர உள்ளது. இதனால் இப்படத்திற்காக ப்ரோமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை ஜூப்ளி ஹில்ஸ் ஜேஆர்சி கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. இந்த விழாவில் இப்படத்தை ப்ரோமோஷன் செய்ய ஜூனியர் என்டிஆரும் வந்திருந்தார்.

-விளம்பரம்-

ஜூனியர் என்டிஆர் பேசுகையில் “அமிகோஸ்” முழு அணியும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துக்களை கூறினார் மேலும் தனக்கு தெரிந்த வரையில் எந்த ஹீரோவும் அதிகப் பரிசோதனைகளை முயற்சித்திருப்பது கல்யாண் ராம்தான். கல்யாண் மாஸ் படங்கள் செய்வதில்லை என்பதை எதிர்பார்க்கும் போது “பிம்பிசாரா” படத்தின் மூலம் அவர் எங்கள் அனைவரையும் திருப்திப்படுத்தினார் என்று புகழ்ந்து கூறினார்.

கோவமான என்டிஆர் :

இப்படி பேசிக்கொண்டிருக்கையில் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருந்த சுபா, ஜுனியர் என்டிஆரை வாழ்த்திய பின்னர் “ஜூனியர் என்டிஆர் 30” அப்டேட் எப்போது வரும் என ஆவலாக காத்திருக்கிறோம் எனக் கூற கோவமடைந்த என்டிஒஆர் மைக்கை வாங்கி “அவர்கள் கேட்காவிட்டாலும் அதைச் செய்ய வைக்கிறீர்கள்” என்று விரக்தியான தொனியில் கூறினார். என்டிஆர் அப்படி பேசியது தற்போது பேசுபொருளாக மாறி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement