தமிழில் முதல் படமே சின்ன ரோலில் நடித்த காரணம் இது தான் என்று முதன்முதலாக மனம் திறந்து நடிகை ஜோதிகா கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் ஜோதிகா. தற்போது நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் காதல் தி கோர். இந்த படத்தில் மம்முட்டி நடித்திருக்கிறார்.
இயக்குனர் ஜோ பேபி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. தன் பாலின ஈர்ப்பைப் பற்றி பேசும் படமாக இந்த படம் அமைந்து இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கவலையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் போது ஜோதிகா கலந்திருந்தார். அப்போது அவரிடம் தமிழில் முதல் படத்திலேயே சின்ன ரோலில் நடித்தது குறித்து கேட்டிருந்தார்கள்.
ஜோதிகா பேட்டி:
அதற்கு ஜோதிகா, நான் முதன் முதலாக இந்தி படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானேன். தமிழில் என்னுடைய முதல் படம் வாலி. இந்த படத்தின் மூலம் தான் அறிமுகமானேன். இந்த படத்தில் சிம்ரன் நடித்த ரோலில் நான் தான் நடிக்க வேண்டியதாக இருந்தது. எஸ் ஜே சூர்யா என்னை தான் கதாநாயகியாக இந்த படத்தில் நடிக்க கேட்டார். நானும் ஒத்து கொண்டேன். ஆனால், இடையில் இந்தி படம் ஒன்று வந்தது.
வாலி படம் குறித்து சொன்னது:
இரண்டு படத்திற்கும் டேட் பிரச்சினை ஏற்பட்டதால் அந்த படத்தை விட்டு நான் வெளியே வந்து விட்டேன். பின் மீண்டும் எஸ் ஜே சூர்யா என்னிடம் வந்து வாலி படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோல் பண்ணுவீங்களா? என்று கேட்டார். நான் அந்த படத்தை விட்டு வெளியே அப்படி வந்திருக்கக் கூடாது. அது என்னுடைய தப்பு தான். அதனால் கண்டிப்பாக அந்த ரோல் பண்ணி தரேன் என்று சொல்லி தான் வாலி படத்தில் அந்த சின்ன ரோலில் நடித்தேன் என்று கூறியிருக்கிறார்.
ஜோதிகா திரைப்பயணம்:
மேலும், ஜோதிகா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் உள்ள விஜய், அஜித், விக்ரம்,ரஜினி,கமல், பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். பிறகு தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஜோதிகா படங்கள்:
திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கொண்டார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோதிகா அவர்கள் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதோடு திருமணத்திற்கு பிறகு ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.