என் சிறுநீர்ல வளர்ந்த மரத்து பழத்த சப்புடுவ,என் வீட்ல சாப்பிட மாட்டியா – ரஞ்சித்தின் சர்ச்சை பேச்சு

0
671
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பா ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதோடு இவருடைய படங்கள் என்றாலே தாழ்த்தப்பட்டவர்களுக்கும், தலித் மக்களுக்கும் ஆதரவாக இருப்பது போல் தான் கதையாகவே இருக்கும். அதிலும், இவர் அம்பேத்கர் குறித்து நிறைய பேசி இருப்பார். அதுமட்டுமில்லாமல் வெளியிலுமே இவர் தலித் மக்களுக்கு ஆதரவாக தான் குரல் கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-
paranjith

மேலும், இவர் சொல்லும் கருத்து சரியாக இருந்தாலும் அதை சொல்லும் விதம் தவறாக இருப்பதால் பலரும் பா.ரஞ்சிதாவை விமர்சித்து கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இவர் கூறியிருப்பது, என்னுடைய வீட்டு பக்கத்தில் ஒரு பப்பாளி மரம் இருந்தது. ஒருவர் அந்தப் பப்பாளி பழத்தை சாப்பிட வருவார். ஆனால், எங்கள் வீட்டில் இருந்து நாங்கள் சாப்பிட கொடுத்தால் வாங்க மாட்டார். அந்த பப்பாளி இலையை கூட சாப்பிடுவார்.

- Advertisement -

பா.ரஞ்சித் சர்ச்சை வீடியோ:

அந்த பப்பாளி மரத்தில் நான் மூத்திரம் போயிருக்கிறேன். என்னுடைய அண்ணன் மகள் பாத்ரூம் போய் இருக்காள் . பாத்திரம், துணி துவைக்கும் அழுக்கு தண்ணி எல்லாம் போயிருக்கிறது. ஆனால், அந்த பப்பாளி பழத்தை தான் சாப்பிடுகிறார். நான் கொடுத்த சாப்பாடு வேண்டாம் என்கிறார் என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதேபோல் ஏற்கனவே இவர் ராஜராஜ சோழன் குறித்து, மாமன்னன் ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்கிறார்கள்.

பா.ரஞ்சித் பேட்டி:

ஆனால் அவரது ஆட்சி காலம் இருண்ட காலம். இங்கு நிறைய பேர் ராஜ ராஜ சோழன் எங்கள் ஜாதி என்று சொல்கிறார்கள். பறையர் அமைப்புகள் உட்பட மொத்தம் எட்டு பேர் ராஜ ராஜ சோழன் எங்கள் ஜாதி என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். ராஜ ராஜ சோழன் என் ஜாதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. தஞ்சை டெல்டா பகுதியில் மிகப்பெரிய சூழ்ச்சியில் என்னுடைய நிலம் பறிக்கப்பட்டது.

-விளம்பரம்-

ராஜ ராஜ சோழன் குறித்து சொன்னது:

மிகப்பெரிய ஆட்சி காலத்தில் தான்.சாதி ரீதியான ஒரு முறை ஆரம்பிக்கப்பட்டது. அவருடைய ஆட்சிக்காலத்தில் தான் நான் ஒரு பெண்களை விலைமாதுவாக மாற்றி மங்கள விலாஸ் என்று வைத்து மிகப்பெரிய அயோக்கியத்தனம் செய்தது அவன் ஆட்சி காலத்தில் தான். தேவதாசி முறை அவனுடைய ஆட்சியில் தான் இங்கே அமல்படுத்தப்பட்டது என்று பேசி இருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.

பா.ரஞ்சித் படம்:

தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, டேனியல் கால்டாகிரோன், பார்வதி, என பலர் நடித்து இருக்கின்றார்கள். தற்போது இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.

Advertisement