நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரைப்படத்தின் இணையும் சூர்யா-ஜோதிகா..!

0
338
Suryajyothika

தமிழ் சினிமாவில் விஜய் , அஜித்திற்கு பின்னர் நடிகர் சூர்யா ஒரு முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை பல ஆண்டுகளாக காதலித்து பின்னர் அவரை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

Surya

சூர்யா ஜோதிகா இருவரும் ஜோடி சேர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஓய்வெடுத்துக்கொண்ட ஜோதிகா பின்னர் ‘மொழி’ படத்தின் மூலம் மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்தார்.

தற்போது நடிகை ஜோதிகாவின் நடிப்பில் ‘காற்றின் மொழி’ படமும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து பிரெட்ரிக் என்ற புதுமுக இயக்குனர் இயக்கதில் உருவாகவுள்ள புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் தயாரிக்க உள்ளது.ஜோதிகா.இதன் மூலம் ஜோதிகா படத்தை முதன் முறையாக தயாரிக்கவிருக்கிறார் நடிகர் சூர்யா. மேலும், இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு கெஸ்ட் ரோல் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கிசுகிசுக்கபடுகிறது.