வசூல் ராஜா படத்தில் சிநேகாவிற்கு முன் இந்த நடிகை தான் நடிப்பதாக இருந்தது – இயக்குனர் சரண் பேட்டி.

0
14427
vasool
- Advertisement -

சினிமாவை பொறுத்து ஒரு சில நடிகர்கள் தவறவிட்ட படங்களில் வேறு சில நடிகர்கள் நடித்து பெரும் ஹிட்டான பல கதைகளை கேட்டிருப்போம். அந்த வகையில் கமல் நடிப்பில் வெளியான வசூல் ராஜா திரைப்படத்தில் சிநேகாவிற்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்து வேறு ஒரு பிரபல நடிகை தான். தமிழில் 2004 ஆம் ஆண்டு வெளியான வசூல் ராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-
Vasoolraja M.B.B.S (2004)

இந்தியில் வெளியான முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தின் ரீமேக்தான் வசூல்ராஜா எம்பிபிஎஸ். இந்தப் படத்தில் கமல் கிரேசி மோகன் பிரகாஷ்ராஜ் சினேகா என்று ஒரு வெற்றிக் கூட்டணியை அமைந்திருந்தார் சரண். மேலும், இந்த திரைப்படம் ஒரு முழு நீள காமெடி படமாக அமைந்திருந்தது. சமீபத்தில் இந்த படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கொண்டாடினார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இந்த படம் குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசுகையில்இந்த படம் ஆரம்பிக்கும் போது கமல் சார் 45 நாட்கள் தான் சூட்டிங் கால்சீட் கொடுத்து இருக்கிறார்கள் என்று சொன்னார்கள் அதேபோல இன்னும் 15 நாட்களில் எல்லா வேலையும் ஆரம்பிக்கவேண்டும் என்று சொன்னார்கள். மூன்றே மாதத்தில் படம் வெளியாக வேண்டும் என்ற ஒரு கட்டாயமும் இருந்தது.

Thenali (2000)

ஆரம்பத்தில் இந்த படத்தில் ஜோதிகா தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர்களால் நடிக்க முடியவில்லை, அதன் பின்னர்தான் சினேகாவை கமிட் செய்தோம், நான் கமல் சாரை வைத்து படம் எடுக்கிறேன் என்று தெரியவந்ததும் பிரகாஷ்ராஜ் எனக்கு போன் செய்து அந்த டீன் கேரக்டரை நான் பண்ணட்டுமா என்று கேட்டார். உடனே நானும் ஓகே சொல்லிவிட்டேன் அவருடைய முதல் தமிழ் படமான டூயட் படத்தில் நான் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றியிருக்கிறேன் என்று கூறியுள்ளார் சரண்.

-விளம்பரம்-
Advertisement